Defective ITR Notice என்றால் என்ன? இதை சரி செய்வது எப்படி? முழுமையான செயல்முறை இதோ
Defective ITR Notice: உங்களுக்கும் டிஃபெக்டிவ் ரிடர்ண் நோட்டீஸ் வந்துள்ளதா? அப்படியென்றால் அச்சம் கொள்ள வேண்டாம். இதை சரி செய்வதற்கான செயல்முறையை இங்கே காணலாம்.
Income Tax: சமீபத்தில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தவர்களில் சிலருக்கு குறைபாடுள்ள ரிட்டர்ன் நோட்டீஸ் (Defective Return Notice) வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த நோட்டீஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உங்களுக்கும் டிஃபெக்டிவ் ரிடர்ண் நோட்டீஸ் வந்துள்ளதா? அப்படியென்றால் அச்சம் கொள்ள வேண்டாம். பிரிவு 139(9)ன் கீழ் இந்த நோட்டீசைப் பெற்ற பிறகு, வருமான வரி கணக்கில் உள்ள குறையைச் சரிசெய்ய உங்களுக்கு 15 நாள் அவகாசம் வழங்கப்படும்.
Defective ITR Notice: வருமான வரி கணக்கு 'குறைபாடுள்ளதாக' குறியிடப்படுவதற்கான சில பொதுவான காரணங்களை பற்றி இங்கே காணலாம்:
- பெயர் பொருந்தாமல் இருந்தால்: உங்கள் பான் கார்டில் உள்ள பெயர், உங்கள் ஐடிஆரில் வழங்கப்பட்ட பெயருடன் பொருந்தவில்லை என்றால் நோட்டீஸ் வரும்.
- வருமானம் இல்லாமல் டிடிஎஸ் கிரெடிட்: தொடர்புடைய வருமானத்தைப் பற்றி கூறாமல், TDS கிரெடிட் க்ளெய்ம் செய்தால்.
- விடுபட்ட அல்லது தவறான தகவல்: வங்கிக் கணக்குத் தகவல் போன்ற அத்தியாவசிய விவரங்களில் பிழைகள் இருந்தாலோ அல்லது அவை விடுபட்டிருந்தாலோ நோட்டிஸ் வரக்கூடும்.
- முழுமைபெறாத ஐடிஆர்: தேவையான ஆவணங்களை இணைக்காமல் இருந்தாலோ, அல்லது கட்டாய இடங்களில் தகவல்கள் நிரப்பப்படாமல் இருந்தாலோ, அந்த வருமான வரி கணக்கு முழுமைபெறாத ஐடிஆர் (ITR) ஆகக் கருதப்பட்டு நோட்டீஸ் வரக்கூடும்.
உங்கள் ITR, 'defective' எனக் குறியிடப்பட்டிருந்தால், பிரிவு 139(9)ன் கீழ் உங்களுக்கு நோட்டீஸ் வரும். இந்த நோட்டீசில் உள்ள குறைபாட்டைச் சரிசெய்து, உங்கள் வருமான வரி கணக்கை (Income Tax Return) மீண்டும் சமர்ப்பிக்க 15 நாட்கள் அவகாசம் இருக்கும்.
Defective ITR: இ-ஃபைலிங் போர்ட்டலைப் பயன்படுத்தி குறைபாடுள்ள ஐடிஆரை சரிசெய்வது எப்படி?
- இ-ஃபைலிங் ITR போர்ட்டலுக்குச் சென்று உங்கள் சான்றுகளுடன் லாக் இன் செய்யவும்.
- 'இ-ஃபைல்' பகுதிக்குச் சென்று, 'File Income Tax Return’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
- கேட்கப்படும் போது, 'Filed in Response to Notice u/s 139(9) to rectify the defect' என்பதை தாக்கல் செய்வதற்கான காரணமாகத் தேர்வு செய்யவும்.
- நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள குறையை மதிப்பாய்வு செய்யவும். உங்களுக்கு அது சரியாக இருப்பதாகத் தோன்றினால், சிக்கலைச் சரிசெய்ய திருத்தப்பட்ட ITR ஐப் தாக்கல் செய்யுங்கள்.
- நோட்டீசில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், 'e-Proceedings' டேபுக்கு சென்று, 'Disagree' என்பதை செலக்ட் செய்து, வழங்கப்பட்ட உரை பெட்டியில், நீங்கள் ஏன் நோடீசை ஏற்கவில்லை என்பதற்கான விரிவான விளக்கத்தை வழங்க வேண்டும்.
Defective ITR: குறைபாடுள்ள ITR ஐ சரிசெய்வது எப்படி?
- Defective ITR-க்கான நோட்டீசைப் பெற்றவுடன், சிக்கலைச் சரிசெய்ய உங்களுக்கு 15 நாட்கள் அவகாசம் உள்ளது. உங்களுக்கு கூடுதல் நேரம் தேவைப்பட்டால், நீங்கள் அதற்கான நீட்டிப்பைக் கோரலாம்.
- உங்கள் சார்பாக நோட்டீசுக்கு பதிலளிக்க உங்கள் வரி ஆலோசகரைப் போன்ற வேறு யாராவது ஒருவரையும் நீங்கள் அங்கீகரிக்கலாம்.
- கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் நீங்கள் நோட்டீசுக்கு பதிலளிக்கவில்லை எனில், உங்கள் வருமான வரி கணக்கு செல்லுபடியாகாத ஐடிஆர் ஆக கருதப்படும். இதனால், அபராதம், வட்டி கட்டணங்கள் போன்ற சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம்.
Defective Income Tax Return என்றால் என்ன?
முக்கிய வருமானத்திலோ, அட்டவணைகளைகளிலோ முழுமையடையாத அல்லது சீரற்ற தகவல்கள் இருந்தாலோ அல்லது வேறு பிற காரணங்களுக்காகவும் சில வருமான வரி கணக்குகள் குறைபாடுடைய ஐடிஆர் அதாவது Defective Income Tax Return ஆக கருதப்படுகின்றன. உங்கள் ஐடிஆர் குறைபாடுடையதாகக் கருதப்பட்டால், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139(9) இன் கீழ் வருமான வரித் துறை (Income Tax Department) உங்களுக்குத் தெரிவிக்கும். இந்த நோட்டீஸ், பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு அல்லது தபால் மூலம் அனுப்பப்படும். இ-ஃபைலிங் போர்ட்டலில் லாக் இன் செய்தும் இந்த நோட்டீசை (Notice) பார்க்கலாம்.
மேலும் படிக்க | குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்: NPS -இன் கீழ் 50% ஓய்வூதியம், அரசின் பம்பர் பரிசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ