சென்னை: பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தினசரி அடிப்படையில் மாற்றியமைக்கப்படுகின்றன. இன்று பெட்ரோலின் விலை லிட்டருக்கு 92.43 ரூபாய், டீசலின் விலை லிட்டருக்கு 85.75 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் எரிபொருட்களின் விலை தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன, பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. 


உலகம் முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் தாக்கத்தை மட்டுப்படுத்த கடந்த ஆண்டு  மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 


Also Read | கோடை வெயில் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு


அதன்பிறகு, தேவைக்கேற்ப, சர்வதேச எண்ணைய் நிலவரத்தின் அடிப்படையில் மே மாதம் வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அவற்றின் விலையை நிலைமைக்கு ஏற்றாற்போல் மாற்றி வருகின்றன.


சென்னையில் கடந்த 16 நாட்களாக பெட்ரோல், லிட்டர் 92.43 ரூபாய், டீசல் லிட்டர் 85.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வரத்து மற்றும் விலையில் மாற்றங்கள் ஏதும் இல்லாததால் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி பழைய விலையில் தொடர்கின்றன.


SMS மூலம் பெட்ரோல் டீசலின் விலையை நீங்கள் அறியலாம். பெட்ரோல் டீசல் விலை தினமும் காலை 6 மணிக்கு புதுப்பிக்கப்படும். இந்தியன் ஆயிலின் வலைத்தளத்தின்படி, நீங்கள் உங்கள் நகரக் குறியீட்டை RSP-யுடன் தட்டச்சு செய்து 9224992249 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். ஒவ்வொரு நகர குறியீடும் வேறுபட்டது. ஐ.ஓ.சி.எல் வலைத்தளத்திலிருந்து இதை நீங்கள் காணலாம். அதே நேரத்தில், உங்கள் நகரத்தில் பெட்ரோல் டீசல் விலையை BPCL வாடிக்கையாளர் RSP 9223112222 மற்றும் HPCLவாடிக்கையாளர் HPPrice-க்கு 9222201122 செய்தியை அனுப்புவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


Also Read | எனது பெற்றோருக்கு கொரோனா, உதவி கேட்கும் பிரபல நடிகை!


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR