மத்திய அரசின் இலவச காப்பீடு... ஆயுஷ்மான் அட்டை பெற விண்ணப்பிக்கும் முறை!
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் என்னும் திட்டம் மூலம் தகுதியுள்ள குடும்பத்தினருக்கு ஆண்டிற்கு ரூபாய் 5 லட்சம் என்ற அளவிற்கு இலவச மருத்துவ காப்பீடு கிடைக்கும்.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் என்னும் திட்டம் மூலம் தகுதியுள்ள குடும்பத்தினருக்கு ஆண்டிற்கு ரூபாய் 5 லட்சம் என்ற அளவிற்கு இலவச மருத்துவ காப்பீடு கிடைக்கும். இந்த காப்பீட்டின் மூலம் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் என்று அளவிற்கு இலவச மருத்துவ சிகிச்சை பலனை பெறுவார்கள். இந்தத் திட்டத்தின் கீழ், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு, அத்துடன் இணைக்கப்பட்ட திட்டத்துடன் இணைக்கப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறலாம்.
இலவச காப்பீட்டு திட்டத்தின் பயனை பெற (Health Insurance) உங்களிடம் ஆயுஷ்மான் அட்டை இருக்க வேண்டும். அதனை பெற விண்ணப்பிப்பது எப்படி என்பதை காணலாம்.
1. ஆயுஷ்மான் கார்டிற்கு விண்ணப்பம் செய்ய முதலில், மொபைல் பிளே ஸ்டோரில் இருந்து PM-JAY (பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா) செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
2. பின்னர் செயலிய்யில் உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும். ஆயுஷ்மான் செயலியில் பயனாளி விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு, OTP ஐ உள்ளிட்டு உள்நுழையவும்.
3. அதன் பிறகு, செயலியில் கேட்கப்படும் உங்கள் மாநிலம், மாவட்டம் உள்ளிட்டு ரேஷன் கார்டு எண் போன்ற தகவல்களை அளித்து பதிவிட வேண்டும்.
4. பின்னர், அங்கீக்காரம் பெற ஆதார் OTP, கைரேகை , கருவிழி ஸ்கேன், முக அங்கீகாரம் ஆகிய அனைத்து விருப்பங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | நீங்கள் வாங்குவது செகண்ட் ஹேண்ட் ஸ்மார்ட்போனா? இல்லை திருடியதா? கண்டுபிடிக்க ஐடியா!
5. ஆதார் அட்டையுடன் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால், ஆதார் OTP என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இணைப்பு இல்லை என்றால் முக அங்கீகாரம் என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
6. இதில் யாருடைய பெயரில் கார்டு எடுக்கப்பட உள்ளதோ, அந்த நபரின் புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகு, உங்கள் முகவரி மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
7. இப்போது ஆயுஷ்மான் தயாரிப்பதற்கான உங்கள் eKYC செயல்முறை நிறைவடைந்தது. இந்த KYC மூலம் நீங்கள் இந்த திட்டத்ட்தை பெற தகுதி உடையவர் என்றால் தானாக அங்கீகரிக்கப்படும்.
8. அதன் பிறகு நீங்கள் ஆயுஷ்மான் கார்டை பதிவிறக்கம் செய்யலாம்.
ஆண்டுக்கு ரூ.8000 கோடிக்கும் அதிகமாக நிதியை ஒதுக்கீடு செய்யும் மத்திய அரசு
மத்திய அரசு, ஆயுஷ் மான் பாரத் யோஜனா என்னும் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கடந்த 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. மக்களுக்கான இந்த இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்காக திட்டத்துக்காக மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.8000 கோடிக்கும் அதிகமாக நிதியை ஒதுக்கீடு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காப்பீட்டுத் தொகையை அதிகரிக்க திட்டமிடும் மத்திய அரசு
PMJAY திட்டத்தின் கீழ் கிடைக்கும் காப்பீட்டுத் தொகையை அரசாங்கம் 5 லட்சத்தில் இருந்து 10 முதல் 15 லட்சமாக உயர்த்தலாம் எனவும் செய்திகள் கசிந்துள்ளன. மேலும், இத்திட்டத்தின் கீழ், 60 கோடி மக்களை சுகாதார காப்பீட்டில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2018 பட்ஜெட்டில் மோடி அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், இரண்டு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன, முதலில் 10 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கவும், இரண்டாவதாக ஒரு லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் கட்டவும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன.
ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்
சமீபத்தில், ஆயுஷ்மான் பாரத் உடல் நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களை 'ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்' என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. முன்னதாக 'ஆயுஷ்மான் பாரத் - சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள்' என அழைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஜியோ, ஏர்டெல் யூஸ் பண்றீங்களா? இனி தாறுமாறாக அதிகரிக்கப்போகுது ரீசார்ஜ் கட்டணம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ