EPFO Update: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை மேற்பார்வையிடுகிறது. இது அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதிய பலன்களை வழங்கும் ஒரு திட்டமாகும். EPF திட்டத்தில் பதிவுசெய்யும் ஒவ்வொரு EPFO உறுப்பினருக்கும் யுனிவர்சல் கணக்கு எண், அதாவது UAN எனப்படும் 12 இலக்க எண் வழங்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாஸ்புக்களில் நிலுவைகளைப் புதுப்பித்தல், முன்கூட்டியே பணம் பெறுதல், அதாவது அட்வான்ஸ் (EPF Advance) பெறுவது மற்றும் ஓய்வுக்குப் பிறகு இறுதித் தீர்வு உட்பட அனைத்து EPF நடவடிக்கைகளுக்கும் UAN தேவைப்படுகிறது.


ஓய்வூதியத்தில் (Pension) பிஎஃப் தொகை ஒரு முக்கிய பங்காக இருந்தாலும், பணி ஓய்வுக்கு பிறகான காலத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய, அவை போதுமானதாக இருக்காது. இதற்கிடையில், உங்கள் இபிஎஃப் கணக்கு (EPF Account) தொடர்பான சில முக்கிய விதிகள் மற்றும் விஷயங்கள் பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். பணியாளர்களின் EPF கணக்கு சில சமயங்களில் தானாக மூடப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் சேமிப்புத் தொகையை திரும்பப் பெறுவதில் இருந்து நீங்கள் தடை செய்யப்படலாம். இப்படி ஏன் நடக்கின்றது? இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 


உங்கள் EPF கணக்கு எப்போது மூடப்படும்? (When does your EPF account get closed?)


உங்கள் பழைய நிறுவனம் மூடப்பட்டு, உங்கள் புதிய நிறுவனத்தின் கணக்கிற்கு உங்கள் இபிஎஃப் தொகையை (EPF Amount) நீங்கள் மாற்றவில்லை அல்லது 36 மாதங்களுக்கு EPF கணக்கில் எந்தப் பரிவர்த்தனையும் செய்யவில்லை என்றால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கு தானாகவே மூடப்பட்டு, EPF இன் செயலற்ற கணக்குகளின் (EPF Inactive Acoounts) போர்ட்ஃபோலியோவில் அது சேர்க்கப்படும்.


அதுமட்டுமின்றி, இந்த வகையில் உங்கள் கணக்கு மூடப்பட்டால், உங்கள் பணத்தை எடுக்க அதிக அளவில் அலைய வேண்டி இருக்கும். இருப்பினும், உங்கள் சேமிப்புத் தொகையை வங்கி KYC மூலமும் எடுக்கலாம். இந்த செயலற்ற கணக்கிலும் நீங்கள் வட்டி (EPF Interest)பெறுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | வரியை சேமிக்க தவறான தகவல்களை கொடுக்காதீங்க... டெக் முறையில் கண்காணிக்கும் IT!


கணக்கை யார் வெரிஃபை செய்வார்கள்?


செயலற்ற பிஎஃப் கணக்குகளுடன் (Dormant PF Accounts) இணைக்கப்பட்ட க்ளைமைத் தீர்ப்பதற்கு, அந்த க்ளெய்ம்களுக்கு பணியாளரின் முதலாளி / நிறுவனம் வேண்டும். எவ்வாறாயினும், ஒரு பணியாளரின் நிறுவனம் மூடப்பட்டு, க்ளெய்ம்களை சரிபார்க்க யாரும் இல்லை என்றால், வங்கி KYC ஆவணங்களைப் பயன்படுத்தி கோரிக்கையை சான்றளிக்கும்.


KYC ஆவணங்கள் (KYC Documents)


சரிபார்ப்புக்கு பின்வரும் KYC ஆவணங்கள் தேவைப்படும்: பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, ESI அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம். கூடுதலாக, ஆதார் போன்ற அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வேறு எந்த அடையாள அட்டையையும் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தலாம். இதைத் தொடர்ந்து, உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் அல்லது பிற அலுவலர்கள் தொகையின் அடிப்படையில் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்கு அல்லது கணக்குப் பரிமாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்க அதிகாரம் அளிக்கப்படுவார்கள். 


பிஎஃப் தொகை 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையரின் ஒப்புதலுக்குப் பிறகு பணத்தை எடுக்கலாம் (EPF Withdrawal) அல்லது வேறு கணக்கிற்கு மாற்றலாம்.


பிஎஃப் தொகை 25,000 ரூபாய்க்கு அதிகமாகவும், 50,000 ரூபாய்க்கு குறைவாகவும் இருந்தால், கணக்கு அதிகாரி நிதி பரிமாற்றம் அல்லது திரும்பப் பெறுவதற்கு ஒப்புதல் அளிக்க முடியும். 25,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால், டீலிங் அசிஸ்டெண்ட் அதை அங்கீகரிக்க முடியும்.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்கள் மீது பண மழை: ஒரே நேரத்தில் 3 குட் நியூஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ