புதுடெல்லி: நாட்டில் வராக்கடன் அளவு தொடர்பாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மொத்தம் 14,56,226 கோடி ரூபாய் அளவுக்கு வராக்கடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியின் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி தொடர்பாக இந்த தரவுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 கார்பொரேட் நிறுவனங்களின் வராக்கடன் தள்ளுபடி குறித்து  07-08-2023 அன்று திமுக எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்விக்குப் (கேள்வி எண்  2983) மத்திய அரசின் நிதியமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் கொடுத்தது. இந்த பதிலை மத்திய நிதித் துறை இணையமைச்சர் Dr.பகவத் காரத் கொடுத்தார்.



அதன்படி,


2014-15- Rs-58,786
2015-16 -Rs-70,413
2016-17-Rs-1,08,373
2017-18-Rs-1,61,328
2018-19-Rs-2,36,265
2019-20-Rs-2,34,170
2020-21- Rs-2,02,781
2021-22 -Rs-1,74,966
2022-23-Rs-2,09,144


இதன்படி, கடந்த ஒன்பது ஆண்டுகளில் மொத்தம் 14,56,226 கோடி ரூபாய் அளவிலான கடன்கள், வராக்கடன்களாக மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.


மேலும் படிக்க | EPF தொகைக்கு வரி விதிக்கப்படுமா? ஓய்வுக்கு முன்னரே முழு பிஎஃப் தொகையை எடுக்க முடியுமா?


கடந்த ஒன்பது நிதி ஆண்டுகளில், Rs.14 லட்சத்து 56 ஆயிரத்து 226 கோடி ரூபாய் மதிப்பிலான வராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன” என்று கூறியிருந்தார்.இந்த மொத்தத் தொகையில் கார்ப்பரேட் தொழில்கள் மற்றும் சேவைகளுக்கான கடன் தள்ளுபடி மட்டும் 7 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் தெரிவித்திருந்தார் 


வராக் கடன் அல்லது வசூலிக்கவே முடியாத கடன் (Bad Debt) என்பது ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனம் வழங்கிய கடனை, சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகும் வசூலிக்க இயலாத கடன் ஆகும். 


மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் அவதிப்படும் மக்கள்! அதிர்ச்சி புகார் உண்மையா?


பொது துறை வங்கிகளின் வாராக் கடன் அதிகரிப்பதற்கு காரணம் பொருளாதார மந்தநிலை என்று கூறப்படுகிறது. வங்கிக் கடனை திரும்ப செலுத்தாத பல நிறுவனங்கள் அடிப்படை கட்டமைப்புத் துறைகளை சேர்ந்தவைகளாக இருக்கின்றன.  .


இந்திய ரிசர்வ் வங்கி விதிகளின் கீழ், வங்கியால் கொடுக்கப்பட்ட கடன்களில் 90 நாட்களுக்கு மேல் வட்டி, அசல் செலுத்தப்படாத கடன் வராக் கடன் என வகைப்படுத்தப்படுகிறது. இது போன்ற கடன்களை ஈடுகட்ட வங்கிகள், தனியாக ஒரு வராக்கடன் என்ற பெயரில் ஒரு தொகையை ஒதுக்கி வைக்க வேண்டும். ஒரு வங்கியின் இந்த புரொவிஷன் தொகைக்கான ஒதுக்கீடு அதிகரித்தால், வங்கியின் லாபம் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க | HRA கொடுப்பனவிற்கு வரி விலக்கு... ‘இந்த’ தவறுகளை செய்யாதீங்க... சிக்கல் ஏற்படும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ