EPFO ​​Update: இபிஎஃப்ஓ சந்தாதாரர்களாக இருக்கும் அனைவரிடமும் பிஎஃப் கணக்கு இருக்கும். ஓய்வூதியத்திற்கான திட்டமிடல் மற்றும் நிதி பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அம்சமாகும். இந்தியாவில் ஓய்வூதியத்திற்காக சேமிப்பதில் முக்கிய வழிகளில் ஒன்று "பணியாளர் வருங்கால வைப்பு நிதி' (EPF) ஆகும். அரசாங்கச் சேமிப்புத் திட்டமான இது, ஊழியர்கள் தங்கள் பணி ஆண்டுகளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தவும், வசதியான எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்களுக்கான வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் ஓய்வூதிய திட்டங்களை நிர்வகிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய இபிஎஃப் வரி வழிகாட்டுதல்கள் (New EPF Tax Guidelines):


ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) முன்பு வரிக்கு உட்பட்டதாக இருக்கவில்லை. அதற்கு விலக்கு இருந்தது. பணியாளர் ஒரு பங்களிப்பை வழங்கும்போது, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ், ரூ.1.5 லட்சம் வரையிலான பங்களிப்புக்கு எதிராக வருமான வரி விலக்கு கோரலாம்.


இந்த சந்தர்ப்பங்களில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) வரிக்கு உட்பட்டதாக இருக்காது


- திரட்டப்பட்ட பேலன்ஸ் தொகைக்கு வட்டி அறிவிக்கப்பட்டால்
- அனைத்து விலக்கு அளவுகோல்களும் பூர்த்தி செய்யப்பட்டிருந்து, பிஎஃப் நிதியிலிருந்து ஒரு தொகை திரும்பப் பெறப்பட்டால்


எனினும், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, ஒரு நிதியாண்டில் 2.5 லட்ச ரூபாய்க்கு அதிகமாக ஈபிஎஃப் கணக்கு மூலம் சம்பாதித்த வட்டிக்கு டிடிஎஸ் (மூலத்தில் கழிக்கப்பட்ட வரி) விதிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கி மேற்கண்ட சில வரிச் சலுகைகளை நீக்கியது.


ஆகஸ்ட் 31, 2021 அன்று, CBDT (மத்திய நேரடி வரிகள் வாரியம்) அரசு சாரா ஊழியர்களுக்கு, ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பு  ரூ.2.5 லட்சத்திற்கும், அரசு ஊழியர்களுக்கு ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால், இந்த பங்களிப்புகள் மூலம் கிடைக்கும் வட்டி TDS -க்கு உட்படுத்தப்படும் என்று கூறியது.


புதிய வழிகாட்டுதலில் என்ன கூறப்பட்டுள்ளது?


கடந்த ஆண்டு (ஏப்ரல் 1, 2022) முதல், ஒரு நிதியாண்டில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல், பிஎஃப் நிதிக்கு ஒரு ஊழியரின் பங்களிப்பின் மீதான வட்டிக்கு வரி விலக்கு (Tax Exemption) அளிக்கப்படும். மேலும் 2.5 லட்சம் ரூபாய்க்கு அதிகமான பங்களிப்பின் மீது பெறப்படும் வட்டிக்கு வரி விதிக்கப்படும். நிறுவனம் / முதலாளி இந்த நிதிக்கு பங்களிக்கவில்லை என்றால் 2.5 லட்சம் ரூபாய் என்ற இந்த வரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. 


மேலும், புதிய விதியின்படி, நிறுவனம் ஒரு நிதியாண்டில் 7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் செய்யும் பங்களிப்பை தவிர (இது வரிக்கு உட்பட்டது), இப்படிப்பட்ட கூடுதலான பங்களிப்பிலிருந்து சம்பாதிக்கப்படும் எந்த ஒரு வட்டிக்கும் ஊழியர்கள் வரி செலுத்த வேண்டும்.


EPF வட்டியில் TDS விலக்கு பொருந்துமா? (TDS Deduction on EPF Interest)


புதிய விதி அனைத்து EPF சந்தாதாரர்களுக்கும் பொருந்தும். க்ளெய்ம் பரிமாற்றங்கள், இறுதி தீர்வு, விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து EPFO க்கு மாற்றுதல் அல்லது இபிஎஃப்ஓ -இலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மாறுதல் என அனைத்திலும் TDS பொருந்தும். அறக்கட்டளைகளுக்கு இடையே ஏதேனும் பரிமாற்றம் நடந்தாலும் இது பொருந்தும்.


மேலும் படிக்க | Year Ender 2023: இந்த ஆண்டு ரிசர்வ் வங்கி செய்த அதிரடி மாற்றங்கள் இவைதான்


PF -க்கான விகிதங்கள்


TDS விகிதம், வருங்கால வைப்பு நிதி கணக்கு பான் (நிரந்தர கணக்கு எண்) உடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைப் பொறுத்தது. பான் எண் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு 10% மற்றும் பான் இல்லாதவர்களுக்கு 20% என்ற விகிதத்தில் சம்பாதித்த வட்டியில் TDS கழிக்கப்படும்.


வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) வேலை செய்யும் நாட்டுடன் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் (டிடிஏஏ) செய்து கொள்ளப்பட்டிருந்தால், வருமான வரிச் சட்டத்தின் 90வது பிரிவின் விதிகளின்படி, 30%க்கும் குறைவான விகிதம் பொருந்தும்.


இது பின்னோக்கிப் பொருந்துமா?


மார்ச் 31, 2021 வரை கடந்த காலக் குவிப்புக்கு TDS எதுவும் பொருந்தாது. ஏப்ரல் 1, 2021 முதல் 2.5 லட்சம் ரூபாய் வரம்பை விட அதிகமான பங்களிப்புகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.


ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்


ஒரு நபர் மாதா மாதம் இபிஎஃப் (EPF) -க்கு 40,000 ரூபாய் பங்களிப்பு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.


அவரது வரி விதிக்கக்கூடிய வட்டி மற்றும் வட்டி மீதான TDS ஆகியவற்றை இந்த அட்டவணையின் மூலம் கணக்கிடலாம்:



மேலே குறிப்பிட்டுள்ளபடி, 5,265 ரூபாயின் வட்டியில் 10% TDS கழிக்கப்படுகிறது, அதாவது ரூ.523. உறுப்பினரின் PAN கணக்கை அவரது PF கணக்கில் இணைக்கவில்லை என்றால், வரி 10%க்குப் பதிலாக 20% கழிக்கப்படும். 


மேலும் படிக்க | உச்சத்தைத் தொடும் இந்தியப் பொருளாதாரம்! அந்நிய செலாவணி கையிருப்பு உச்சத்தில்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ