புதுடெல்லி: தீபாவளி பண்டிகை வர உள்ளதால், ஆன்லைன் விற்பனை (Online Sales) சீடுபிடித்துள்ளது. பலர் தங்கள் குடும்பங்களுக்கு தேவையான துணிமணி உட்பட வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். இதை நன்கு பயன்படுத்திக்கொள்ள வங்கிகள், கிரெடிட் கார்டு மற்றும் டிஜிட்டல் பேமண்ட் பணப்பை (Payment Wallets) போன்றவற்றின் மூலம் தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் போன்ற சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக கிரெடிட் கார்டுகள் எப்போதுமே ஆன்லைன் ஷாப்பிங் செய்ய அதிகமாக பயன்படுத்தப்பட்டாலும், இப்போது "பை நவ் பே லேட்டர்" (Buy Now Pay Later) சேவையும் சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமடைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போட்டி போட்டுக்குக்கொண்டு பல சலுகை மற்றும் புதிய அறிவிப்புக்களை அறிவித்து வருகின்றனர். இந்த கொரோனா சூழ்நிலையில், இளைய நுகர்வோரை கவர, "முதலில் வாங்கிக்கொள்ளுங்கல் பின்னர் பணம் செலுத்துங்கள்" திட்டம் கொண்டு வரப்பட்டன. தற்போது ஆன்லைன் ஷாப்பிங்கில் "பை நவ் பே லேட்டர்" (Buy Now Pay Later) மூலம் அதிகமானோர் பொருட்களை வாங்கி வருகின்றனர்.


இந்த சேவைகள் பொதுவாக வணிகர்களிடமிருந்து பொருள் வாங்கியதற்கான கட்டணத்தையும், வாடிக்கையாளர்களிடமிருந்து சேவை வரியையும் வங்கி வசூலித்துக்கொள்ளும். பி.என்.பி.எல் (BNPL) சேவை மூலம் பயன்படுத்திக்கொண்ட பணத்தை பதினைந்து அல்லது மாதத்திற்கு ஒரு முறை செலுத்தலாம்.


கிரெடிட் கார்டுகளை விட "Buy Now Pay Later" சிறந்த விருப்பமா?


கிரெடிட் கார்டு மூலம் பயன்படுத்திய நிலுவைத் தொகை செலுத்தப்படாவிட்டால், வட்டி உட்பட பிற வரி என அதிக அளவில் வசூலிக்கிறார்கள். இது ஆண்டுக்கு 36 முதல் 42 சதவீதம் வரை இருக்கிறது. அதேபோல பி.என்.பி.எல் (BNPL) மூலம் கடன் வாங்கியவர்களுக்கு 5 முதல் 10 கூடுதல் நாட்கள் வரை சலுகை காலம் வழங்கப்படுகிறது. மேலும் அந்த சலுகை காலம் தாண்டி செலுத்தப்படாவிட்டால், 250 முதல் 300 வரை Late Charge வசூலிக்கப்படுகிறது.