ITR Filing காலக்கெடு நீட்டிக்கப்படுமா? வரி செலுத்துவோர் இதை கோர காரணம் என்ன?
ITR Filing: 2023-24 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2024. இந்த தேதிக்குள் வரி செலுத்துவோர் தங்களது ஐடிஆர் -ஐ தாக்கல் செய்து முடிக்க வேண்டும் என வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
ITR Filing: வரி செலுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். வரி செலுத்துவோருக்கு ஐடிஆர் -ஐ தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே உள்ளன. பலர் ஏற்கனவே வருமான வரி கணக்கை தாக்கல் செய்து விட்டனர். இவர்களில் பலருக்கு ஐடிஆர் ரீஃபண்ட் தொகையும் வந்துவிட்டது. இன்னும் சிலர் ஐடிஆர் தாக்கல் செய்துவிட்டு, ரீஃபண்ட் தொகைக்காக காத்திருக்கிறார்கள்.
ஐடிஆர் தாக்கல் காலக்கெடு
2023-24 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை (Income Tax Return) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2024 ஆகும். இந்த தேதிக்குள் வரி செலுத்துவோர் தங்களது ஐடிஆர் -ஐ தாக்கல் செய்து முடிக்க வேண்டும் என வருமான வரித்துறை (Income Tax Department) கேட்டுக்கொண்டுள்ளது. ஐடிஆர் தாக்கல் செய்ய 2 நாட்களே உள்ள நிலையில், இன்னும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத பலரும் இதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சரியான நேரத்தில், இதற்காக காலக்கெடுவிற்குள் ஐடிஆர் தாக்கல் (ITR Filing) செய்தால், அபராதங்களையும், பிலேடட் ஐடிஆர் தாக்கல் செய்வதையும் தவிர்க்கலாம். இன்னும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் உடனடியாக இதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் பிற தகவல்களை தயாராக வைத்துக்கொண்டு இதை செய்து முடிப்பது நல்லது.
ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை
இதற்கிடையில், 2024-25 ஆம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்குமாறு அகில இந்திய வரி பயிற்சியாளர்களின் கூட்டமைப்பு (AIFTP) முறைப்படி மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் (CBDT) கோரிக்கை விடுத்துள்ளதாக செய்தி நிறுவனமான PTI இன் அறிக்கை தெரிவிக்கின்றது.
இது குறித்து CBDTக்கு ஒரு குறிப்பாணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில், AIFTP தேசியத் தலைவர் நாராயண் ஜெயின் மற்றும் நேரடி வரிகள் பிரதிநிதித்துவக் குழுத் தலைவர் எஸ்எம் சுரானா ஆகியோர் சமீபத்தில் பல மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் ITR தாக்கல் செய்யும் செயல்முறையை பெருமளவில் பாதித்துள்ளதாகவும், உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவுகள் இந்த பணிக்கான சவால்களை மேலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவான (ITR Filing Deadline) ஜூலை 31 நெருங்கி வருவதால், அதை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக அதிகரித்து வருகிறது. கடைசி நேரத்தில் பலர் ஐடிஆர் தாக்கல் செய்ய முயற்சிப்பதால் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான வலைத்தளத்தின் வேகமும் அவ்வப்போது மிக மந்தமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
5 கோடிக்கும் அதிகமான ஐடிஆர் தாக்கல் செய்யப்பட்டுள்ளன
- வருமான வரித்துறை மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) அளித்துள்ள தகவல்களின் படி, ஜூலை 26 வரை 5 கோடிக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் (ITR) தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
- வருமான வரித்துறை சமீபத்திய அறிவிப்பில், சரியான நேரத்தில் ரீஃபண்ட் பெறுவதை உறுதிசெய்ய, வரி செலுத்துவோர் (Taxpayers) தங்கள் வருமானத்தை சரியாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
- ரீஃபண்ட் க்ளைம்கள் சரிபார்ப்புக்கு உட்பட்டவை என்றும், இந்த காரணத்தால் இதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
- வருமான வரி கணக்குகள் சரியாக தாக்கல் செய்யப்படால், ரிட்டர்ணை திரும்பப்பெறும் செயல்முறையும் விரைவாக நடக்கும்.
- ஐடிஆர் தாக்கலில் முரண்பாடுகள் இருந்தால், அது திருத்தப்பட்ட வருமான வரி கணக்கிற்கான கோரிக்கைகளுக்கு வழிவகுக்கும்.
- தவறான மூலத்தில் வரி விலக்கு (TDS) தொகையை கோருவது, வருமானத்தை குறைத்து மதிப்பீடு செய்வது, விலக்குகளை உயர்த்துவது, செய்யாத செலவுகளுக்கு க்ளெய்ம்களை சமர்ப்பிப்பது போன்றவற்றுக்கு எதிராகவும் வருமான வரித்துறை வரி செலுத்துவோரை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வரி செலுத்துவோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் முன் இந்த அனைத்து விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
மேலும் படிக்க | EPS: பணி ஓய்வுக்கு பிறகு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் தெரியுமா? முழு கணக்கீடு இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ