பட்ஜெட் 2024-25: இன்னும் சில நாட்களில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட மத்திய அரசு பட்ஜெட்டை சமர்ப்பிக்க இருக்கிறது. இந்த பட்ஜெட்டில், சில சிறப்பு வகைகளின் வருமான வரியில் அரசாங்கம் நிவாரணம் வழங்கலாம் என்றும், வருமான வரி விதிப்பில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரி செலுத்துபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஐடிஆர் தாக்கல் செய்யும்போது வரி விலக்கு வரம்பு என்பது தொடர்பாக பல சந்தேகங்கள் எழும். விளக்கம் தெரிந்த பிறகு, வருமான வரி விலக்கு வரம்பு இன்னும் அதிகரிக்கக்கூடாதா என்ற கேள்வியும் எழும். ஒவ்வொரு ஆண்டும் போல், இந்த முறையும், சம்பளம் பெறும் வகுப்பினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், வரி வரம்பை மாற்ற வேண்டும் எனவும், 80C இன் கீழ் வரம்பை அதிகரிக்கக் வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.


இந்த முறை நடுத்தர மக்களின் கோரிக்கைகலுக்கு அரசு செவி சாய்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சக வட்டாரத் தகவல்களின்படி, புதிய அரசு தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பின் கீழ் வரி விலக்கு வரம்பை தற்போதைய ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படலாம்.


அரசின் பட்ஜெட் நடுத்தர மக்களுக்கு ஆசுவாசம் அளிக்குமா?


இதற்கு முன்னதாக, இந்த பட்ஜெட்டில் சில சிறப்பு வகைகளின் வருமான வரியில் அரசாங்கம் நிவாரணம் வழங்கக்கூடும் என்று பல ஊடக அறிக்கைகள் கூறியிருந்தன. இந்த முறை வருமான வரி விதிப்பு மாற்றம் செய்யப்படலாம் என்றும், வரிச்சலுகை வரம்பை அதிகரிப்பதன் மூலம் நடுத்தர மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும், இது மக்களின் செலவு செய்யும் வரம்பை அதிகரிக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.


2020ஆம் ஆண்டு பட்ஜெட்டில், வரி செலுத்துவோருக்கு பழைய வரி முறை மற்றும் புதிய வரி முறை என்ற இரண்டு விருப்பங்கள் வழங்கப்பட்டன. அந்த இரண்டு வரி முறைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் தெரிவும் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் டிஏ ஹைக்: அறிவிப்பு எப்போது?


வரி விதிப்பை 25% ஆக குறைக்க வாய்ப்பு உள்ளதா?
பழைய வரி விதிப்பில், பல்வேறு வகையான முதலீடுகளுக்கு வரிச் சலுகை கிடைக்கும். ஆனால் புதிய வரி விதிப்பில், வரி விகிதம் குறைவாக உள்ளது, ஆனால் அதிக விலக்கு அல்லது விலக்கு பலன் கிடைக்காது. பழைய வரி முறையில், பல்வேறு வகையான முதலீடுகளுக்கான விலக்குகள், HRA மற்றும் லீவ் டிராவல் அலவன்ஸ் (LTA) போன்ற விலக்குகளைப் பெறலாம். புதிய வரி விதிப்பில் 30% முதல் 25% வரையிலான உயர் வரி அளவை அரசாங்கம் குறைக்க வாய்ப்பில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான நுகர்வை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அரசாங்கம் கருதுகிறது.


பழைய வரி விதிப்பில் மாற்றமா?
பழைய வரி முறையில் வரி விதிப்பை மாற்றுவது குறித்து அரசு யோசிக்கவில்லை. ஆனால், அதிகபட்ச வரியை (30%) ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


புதிய வரி விதிப்பு முறைக்குள் மக்களை கொண்டு வரும் முயற்சி


உண்மையில், புதிய வரி முறைக்குள் வரி செலுத்துபவர்களை கொண்டுவர அரசாங்கம் விரும்புகிறது. புதிய அமைப்பில் குறைவான விலக்குகள் மற்றும் சலுகைகள் உள்ளன, ஆனால் வரி விகிதம் குறைவாக உள்ளது. புதிய வரி முறையில் ஆண்டுக்கு ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30% வரி விதிக்கப்படும் அதேசமயம் பழைய முறையில் ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 30% வரி விதிக்கப்படுகிறது.


மேலும் படிக்க | அதிகரிக்குமா வங்கி சேமிப்புக் கணக்கு வட்டி? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் SBI சேர்மன் வேண்டுகோள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ