Demonetisation: தடைசெய்யப்பட்ட 500 ரூபாய் நோட்டு, ஆன்லைனில் 10000 ரூபாய் சம்பாதிக்க உதவும்
2016 நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு பழைய 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்தது.`தங்கத்தைக் கொடுத்து பணம் பெறுங்கள்` (`cash for gold) என்பது போன்ற விளம்பரங்களை பார்த்திருக்கலாம், ஆனால் `பணத்திற்கு பணம்` (`cash for cash`) பற்றி யோசித்திருக்கிறீர்களா?
2016 நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு பழைய 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்தது.'தங்கத்தைக் கொடுத்து பணம் பெறுங்கள்' ('cash for gold) என்பது போன்ற விளம்பரங்களை பார்த்திருக்கலாம், ஆனால் 'பணத்திற்கு பணம்' ('cash for cash') பற்றி யோசித்திருக்கிறீர்களா?
2016 ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, பிரதமர் நரேந்திர மோடியால் தடை செய்யப்பட்ட பழைய 500 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்கள் வீட்டில் இருந்தபடியே 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
நவம்பர் 2016 இல் பணமதிப்பு நீக்கத்திற்கு முன்பு பழைய 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்தது. ரிசர்வ் வங்கி ஒரு நாணயத்தை வெளியிடும் போது அது ஒரு நிலையான வடிவத்துடன் அச்சிடுகிறது. எனவே, சில ரூபாய் நோட்டுகள் ஒரே மாதிரியாகத் தோன்றலாம்.
ஆனால் அவற்றில் உள்ள தனித்துவம் சட்டென்று வெளியில் தெரியாது. கரன்சி நோட்டை அச்சிடும் போது ஏதேனும் தவறு நடந்தால் அந்த நோட்டுக்கு மவுசு கூடிவிடும். அதன் விலை அதிகரித்துவிடும்.
தடை செய்யப்பட்டுள்ள பழைய 500 ரூபாய் நோட்டுகள், இப்போது 'அபூர்வ இந்திய நாணயம்' (rare Indian currency) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, பழைய 500 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், அதன் வரிசை எண்ணை சரிபார்க்க வேண்டும். சீரியல் எண் ரூ .500 நோட்டில் இரண்டு முறை அச்சிடப்பட்டிருந்தால், அதைக் கொடுத்து 5,000 வரை வரை சம்பாதிக்கலாம். உங்களிடம் உள்ள பழைய 500 ரூபாய் நோட்டின் விளிம்பு வழக்கத்தை விட பெரியதாக இருந்தால், அதற்கு 10,000 ரூபாய் கிடைக்கும்.
உங்களிடம் அப்படிப்பட்ட நோட்டுகள் இருந்தால், பணத்திற்கு ஈடாக ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொள்ளும் Quickr அல்லது Coinbazzar.com போன்ற வலைத்தளத்தை அணுகுங்கள்.
Qucikr மற்றும் Coinbazzr தவிர, பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகள் பணத்திற்கு ஈடாக வர்த்தகம் செய்யப்படும் பல வலைத்தளங்கள் உள்ளன. அவற்றை கண்டறிந்து பயன்பெறுங்கள்.
ALSO READ | ஆகஸ்ட் 31: இன்று தமிழகத்தில் 1512 பேருக்கு புதிதாக கோவிட் பாதிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR