இன்றைய காலகட்டத்தில், ஆரோக்கியம் குறித்து சிந்திப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பெரும்பாலானோர் ஆரோக்கியமான உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதனால் அவல் எனப்படும் ரைஸ் பிளேக்ஸ் உணவின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குளிர்காலம் அல்லது கோடை காலம் எதுவாக இருந்தாலும், எந்த ஒரு பருவத்திலும் அதன் விற்பனை குறையாமல் இருக்கும். நீங்களும் உங்கள் சொந்த தொழிலைத் தொடங்க விரும்பினால், இன்று உங்களுக்காக ஒரு சிறந்த வணிக யோசனையை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு மிகக் குறைந்த பணமே தேவைப்படும். இது ஒவ்வொரு மாதமும் பம்பர் டிமாண்ட் கொண்ட வணிகமாகும்.ஆரோக்கிய விழிப்புணர்வு அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில், அவல் இல்லாமல், மக்களின் காலை உணவு முழுமையடையாமல் உள்ளது. அவல் உற்பத்தி செய்வதற்கான யூனிட் அமைப்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவல் சத்தான உணவாக கருதப்படுகிறது. இது தயாரிப்பது சுலபம். ஜீரணிக்கவும் எளிதானது. அவல் விற்பனைக்கான சந்தை வேகமாக வளர்ந்து வருவதற்கு இதுவே காரணம். குளிர்காலம் அல்லது கோடை காலம் எதுவாக இருந்தாலும், எல்லா காலங்களிலும் மிகுந்த விருப்பத்துடன் சாப்பிடுவார்கள். இந்தத் தொழிலைத் (Business Idea) தொடங்கினால் நல்ல வருமானம் பெறலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அவல் உற்பத்தி செய்யும் யூனிட்டை அமைப்பதன் மூலம் உங்கள் சொந்த வணிகத்தை (Profitable Business) தொடங்கலாம்.


அவல் உற்பத்தி யூனிட்டை அமைப்பதற்கான  செலவு


காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (KVIC) திட்ட அறிக்கையின்படி, அவல் உற்பத்தி  அலகு ஒன்றை அமைப்பதற்கான செலவு சுமார் 2.43 லட்சம் ரூபாய். இதில் 90 சதவீதம் வரை கடன் கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், அவல் உற்பத்தி வணிகத்தைத் தொடங்க நீங்கள் சுமார் 25,000 ரூபாய் ஏற்பாடு செய்ய வேண்டும்.


அவல் உற்பத்தி  பிரிவை அமைக்க தேவையான பொருட்கள்


அவல் தயாரிப்பு தொழிலைத் தொடங்க, சுமார் 500 சதுர அடி இடம் தேவை. அவல் தயாரிக்கும் இயந்திரம், உலை, பேக்கிங் இயந்திரம் மற்றும் டிரம் உள்ளிட்ட சிறிய பொருட்கள் தேவைப்படும். இந்த வணிகத்தின் தொடக்கத்தில், சில மூலப்பொருட்களைக் கொண்டு வந்து தொடங்கி, அதன் அளவை படிப்படியாக அதிகரிக்க வேண்டும் என்று காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் KVIC தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையை பின்பற்றுகையில், நீங்கள் நல்ல அனுபவத்தைப் பெறுவீர்கள், உங்கள் வணிகமும் வளரும்.


மேலும் படிக்க | மருத்துவ கூரியர் சேவை: ₹7 லட்சம் முதலீட்டில் மாதந்தோறும் ₹1-2 லட்சம் சம்பாதிக்கலாம்!


அவல் தயாரிப்பு தொழிலில் கிடைக்கும் லாபம்


KVIC திட்ட அறிக்கையின்படி, திட்டத்தைத் தொடங்கிய பிறகு, நீங்கள் மூலப்பொருட்களை சேகரிக்க வேண்டும். இதற்கு சுமார் ரூ.6 லட்சம் செலவாகும். இது தவிர, வேறு வகைகளில் பிற செலவுகள் ரூ.50,000 என்ற அளவில் இருக்கும். இதன் மூலம் சுமார் 1000 குவிண்டால் அவல் உற்பத்தி செய்யப்படும். இதில் உற்பத்தி செலவு ரூ.8.60 லட்சம். 1000 குவிண்டால் அவலை சுமார் 10 லட்ச ரூபாய்க்கு விற்கலாம். அதாவது சுமார் ரூ.1.40 லட்சம் லாபம் சம்பாதிக்கலாம்.


தொழிலுக்கான கடன் பெறும் வழிமுறை


KVIC அறிக்கையின்படி, நீங்கள் திட்ட அறிக்கையைத் தயாரித்து, கிராமத் தொழில்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடனுக்கு விண்ணப்பித்தால், நீங்கள் சுமார் 90 சதவிகிதம் கடன் பெறலாம். கிராமத் தொழிலை ஊக்குவிக்க KVIC மூலம் ஒவ்வொரு ஆண்டும் கடன் வழங்கப்படுகிறது. இதை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையானது வாசகர்களுக்கு தொழில் திட்ட யோசனைகளை வழங்கும் நோக்கில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. Zee News கட்டுரை எந்த விதமான நிதி ஆலோசனைகளையும் வழங்க விரும்பவில்லை. எந்தவொரு முயற்சியையும் தொடங்குவதற்கு, நீங்கள் உங்கள் சொந்த விடாமுயற்சி மற்றும் சந்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.)


மேலும் படிக்க | Business Tips: வெறும் ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. மாதம் 40,000-50,000 வரை சம்பாதிக்கலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ