உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனே நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களில் 25.4.2018 முதல் 29.4.2018 வரை அதிமுக  சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாகப்பட்டினம், அரியாலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் திருச்சி, திருவாரூர், கரூர், கடலூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் பொது கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாகப்பட்டினம் மாவட்டத்தில் 25-ம் தேதி தொடங்கும் முதல் பொது கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.


அதேபோல 28-ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் பொது கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கிறார்.


ஐந்து நாட்கள் நடைபெறும் பொதுகூட்டத்திற்கு யார் தலைமை ஏற்பார்கள் என்ற விவரத்தையும் அதிமுக சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது.


அதன் விவரங்கள்:-