காவிரி விவகாரம்: MP-க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் - கமல்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக அரசு அதிகாரிகள் ராஜினாமா செய்ய தயாராக வேண்டும் என கமலஹாசன் தெரிவித்துள்ளார்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக அரசு அதிகாரிகள் ராஜினாமா செய்ய தயாராக வேண்டும் என கமலஹாசன் தெரிவித்துள்ளார்!
மும்பையில் நடைப்பெறுவுள்ள நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்ள சென்னை விமான நிலையம் வந்த கமலஹாசன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது...
உண்ணாவிரதம் என்பது இந்த காலக்கட்டத்தில் மாற்றத்தினை உண்டாக்காது, காவிரி மேளான்மை வாரியம் தொடர்பாக தமிழக அரசு தியாகம் செய்ய அரசு தயாராக வேண்டும் என தெரிவித்தார்.. அழுத்தம் என்றால் எந்த வகையில் என்று செய்தியாளர் ஒருவர் வினவுகையில் "அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தயாராக வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
காவிரி விவகாரம்...
காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் போட்டது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது.
ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு நேற்றே முடிவடைந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், காலம் தாழ்த்தி வருகிறது மத்திய அரசு. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது பற்றி இதுவரை எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை.
இதனால் தமிழகத்தில் பல இடங்களில் விவசாயிகள் போராடி வருகின்றனர். தமிழக அரசும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நேற்று நடை பெற்றது நடைபெற்றது.
தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், நீர்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் இந்த அலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதில், காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் தர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அனைத்துக்கட்சி கூட்டத்தையும் கூட்டி ஒருமித்த கருத்தை எட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதையடுத்து, மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசித்ததாகவும் தகவல் வந்தது.
இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஏப்ரல் 2-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். அதே வேலையில் திமுக சார்பில் வரும் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!