காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை தீவிரமாக நடத்தி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இந்த போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள், முதியவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பில் நடத்தி வருகிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஈடாக தற்போது இந்த போராட்டமானது தீவிரமடைந்து வருகிறது. 


அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெறும் ராணுவக் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். அவரது வருகையையொட்டி பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள், முதியவர்கள், பெண்கள் என அனைவரும் கருப்புக் கொடி, கருத்து சட்டை அணிந்து மத்திய அரக்கு, மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். 


அதேநேரம் இந்த போராட்டம் சம்மந்தமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.