#Cauvery: 3-வது நாள் காவிரி உரிமை மீட்பு பயணம் துவக்கம்!
தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தஞ்சையில் இருந்து 3-வது நாள் காவிரி உரிமை மீட்பு பயணம் துவங்கியது...!
தமிழகத்தின் காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
முன்னதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் சென்னையில் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடா் கழகம் என மொத்தம் 9 கட்சிகள் கலந்துக்கொண்டனர்.
இதை தொடர்ந்து, தனது முதல்நாள் பயணமான “காவிரி உரிமை மீட்பு பயணம்” முதல் கட்டமாக திருச்சி முக்கொம்புவில் இருந்து கடலூா் வரையிலான பயணம் ஏப்ரல் 7-ம் தேதி பெற்றது. இரண்டாவது நாளாக தஞ்சையில் இருந்து புறப்பட்டார்.
இதை தொடர்ந்து, தனது மூன்றாவது நாளான தஞ்சையில் இருந்து துவங்கினார்.