காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திண்டிவனத்தில் பாமக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு. மேலும் மற்றொருவர் படுகாயத்துடன் உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 



 


 


படுகாயம் அடைந்துள்ளார். ரயில் எஞ்சின் மீது ஏறிய பாமக நகர இளைஞரணி துணை செயலாளர் ரஞ்சித் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். குருவாயூர் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டபோது இந்த துயரம் சம்பவம் நடைபெற்றது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பாமக சார்பில் இன்று (ஏப்ரல் 11-ம் தேதி) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தம் போராட்டம் நடித்தி வருகின்றனர். 


இந்த போராட்டத்துக்கு வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் ஆதரவளிக்க வேண்டும் என்ற அந்தக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தங்க.ஜோதி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இந்த போராட்டத்துக்கு புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் காட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. 


இந்த போராட்டத்தின் எதிரொலியாக புதுச்சேரியில் பஸ்கள் இயக்கப்படவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கடலூரில் 50,000 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 


இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி,பாமக சார்பில் திண்டிவனத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் மின்சாரம் தாக்கி தொண்டர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் போராட்டக்களத்தில் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.