சமஸ்கிருதத்தை தங்கக்கட்டிலில் சீராட்ட விரும்பும் மத்திய அரசு அன்னை தமிழை அவமானம் செய்கிறது என ஸ்டாலின் காட்டம்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குடியரசு தலைவர் விருதுக்கான அறிவிப்பில் தமிழ் மொழிமட்டும் புறகணிக்கபட்டுள்ளது. மற்ற செம்மொழிகள் அனைத்தும் விருதுக்கு தகுதி பெரும்பொது, தமிழ் மொழிமட்டும் ஏன் அந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது. 


தேசிய அளவில் 27 பேருக்கும், சர்வதேச அளவில் வெளிநாடுவாழ் இந்தியர் மற்றும் வெளிநாட்டவர் 9 பேருக்கும் ரூ.5 லட்சம் விருது தொகையும், குடியரசுத் தலைவர் விருதும் வழங்கபடுகிறது. இது தவிர, இந்திய இளம் அறிஞர் 29 பேருக்கு தலா ரூ.1 லட்சம் விருது தொகையும், மஹரிஷி பத்ராயன் வியாஸ் சமான் (MBVS) விருதும் வழங்கப்படயுள்ளது.  


இதில், 1958-ல் முதல் சமஸ்கிருதம், அரபி, பாரசீக மொழி அறிஞர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. பின்னர், 1996-ல் முதல் பாலி/பிராகிருத மொழி அறிஞர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து, செம்மொழி தகுதி பெற்ற மேலும், நான்கு மொழி அறிஞர்களுக்கு (ஒடியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம்) விருது வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. ஆனால், செம்மொழி என அந்தஸ்து பெற்ற தமிழ் மொழிக்கு மட்டும் இந்த விருது அறிவிப்பு பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இதனை கண்டித்து தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் மத்திய அரசை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 


அவர் ட்விட்டரில் கூறியுள்ளது....!           


2018-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் விருது மற்றும் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருது வழங்குவதில் இந்திய நாட்டின் மூத்த மொழியான செம்மொழியாம் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு இருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.பாஜக அரசின் இத்துரோகத்தை எந்தவொரு தமிழனும் மன்னிக்க மாட்டான் என பதிவு செய்துள்ளார்.