BE ஆன்லைன் கவுன்சிலிங்-க்கு தடையில்லை - உயர்நீதிமன்றம்!
ஆன்லைன் கவுன்சிலிங் முறைக்கு தடைவிதிக்கு இயலாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது!
ஆன்லைன் கவுன்சிலிங் முறைக்கு தடைவிதிக்கு இயலாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது!
ஆன்லைன் மூலம் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கவும், கலந்தாய்வு நடத்தவும் தடைவிதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வினை ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலை., அறிவித்த நிலையில் இணைய வசதி இல்லாத கிராமப்புற ஏழை மாணவர்கள் பொறியியல் பயில்வதற்கான வாய்ப்பு இழக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அண்ணா பல்கலைக்கழக சார்பில் வாதாடிய வழக்கறிஞர், மாணவர்களின் விண்ணப்ப கட்டணத்தை DD-யாக ஏற்க மென்பொருள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே நாளை முதல் மாணவ, மாணவிகள் தங்கள் விண்ணப்ப கட்டணத்தை DD மூலமாகவும் செலுத்தலாம் தெரிவித்தார்.
ஆன்லைன் சேர்கை குறித்து அவர் தெரிவிக்கையில், ஆன்லைன் மாணவர் சேர்க்கை வெளிப்படைத் தன்மை நிகழ்கிறது என தெரிவித்தார். மேலும் மாவட்டம்தோறும் மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க உதவி மையங்கள் உள்ளதையும், DD மூலமாக விண்ணப்ப கட்டணம் ஏற்கப்படும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, வாதத்திற்கு பின்னர் ஆன்லைன் மூலம் மட்டும் பொறியியல் கலந்தாய்வு என்ற முடிவுக்கு தடைவிதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து பத்திரிக்கை, ஊடகங்களில் விளம்பரப்படுத்தவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.