தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
லட்சத்தீவுகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வடக்கு கடலோர ஆந்திரா பகுதிகளின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தமட்டில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்,அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 34 மற்றும் 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது!