ஏ.என்.-32 விமானம்: கடலில் சந்தேகப் பொருட்கள் கண்டுபிடிப்பு
சென்னையிலிருந்து அந்தமான் நோக்கி சென்ற ஏ.என்.32 விமானப்படை விமானம் மாயமானது. இந்த விமானம் குறித்த தகவல் 5 நாட்களாகியும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் கடலுக்கடியில் மாயமான விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், சென்னை கிழக்கே, 145 மைல் கடல் தொலைவில் கடலில் 2 சந்தேகப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து கடலோர காவல்படை விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த பொருட்கள் மாயமான விமானத்தின் பாகங்களா என ஆய்வு நடைபெற்று வருகிறது. கடலில் ஆரஞ்சு நிறத்தில் டிரம் போன்று 2 பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.