ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு: முதல்வர் விளக்கம்!
மக்கள் உணர்வை மதித்து ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதாக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்!
தூத்துக்குடி: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்ததால் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தின் நூறாவது நாளான கடந்த செவ்வாயன்று துவங்கி போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை சற்று முன்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
இது தொடர்பாக தற்போது, விளக்கம் அளித்துள்ள முதல்வர் பழனிசாமி,,!
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்ததால் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. என்றும், இதுதொடர்பாக வலியுறுத்திய பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் வேண்டுகோளையும் பரிசீலனை செய்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடியில் போராடிய மக்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு தீர்வு கண்டுள்ளது என்றும் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.