சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் போட்டது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.


அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது. 


ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்த நிலையில், இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர். 


இதை தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு அமைக்காததை கண்டித்து, தமிழக அரசியல் கட்சிகள் சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு காவிரி வாரியம் அமைப்பது தொடர்பாக மேலும் இரண்டு வாரம் அவகாசம் கோரி உள்ளது. 


தற்போது, காவிரி வாரியம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் இது தொடர்பாக ஆலோசிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.