இறந்த தந்தையின் உடலை தள்ளு வண்டியில் வைத்து குழந்தைகள் கொண்ட சென்ற விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திர பிரதேச மாநிலம் பாரபங்கி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், இறந்த தந்தையின் உடலை அவரது குழந்தைகள் தள்ளு வண்டியில் வைத்து சென்றது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


இச்சம்பவம் குறித்து முதன்மை மருத்துவ அதிகாரி தெரிவிக்கையில் "மாவட்ட அளவில் 2 வேண்கள் மட்டுமே எங்களிடம் உள்ளது. போதிய வாகன வசதி இல்லாத நிலையிலே இந்த சம்பவம் நிகழ வழிவகுத்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.



சமத்துவ மருத்து நிலையத்தின் (CHC) இந்த அவல நிலைக்கு போதிய வசதிகள் வழங்கப்படாததே காரணம். இந்த வசதிகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!