சீனாவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா, இணையத்தில் தகல்களை பகிர்ந்துக்கொள்ளும் வகையில் UC Share என்னும் செயலியினை அறிமுகம் செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

UC Web நிறுவனத்தின் செயல்பாட்டில் தற்போது ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்களுக்கு தகல்கள் பகிர்ந்துக்கொள்ளும் வகையில் UC Share செயலியினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.


குறைந்த அளவு டேட்டாவால் இணையத்தில் தேடல்களை செய்ய முடியும் என நிறுபித்த UC Web நிறுவனம் தற்போது, மிகவும் குறைவான வேகத்தில் கோப்பு தகவல்களையும் பகிர முடியும் என நிறுபிக்க இந்த செயலியினை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.


சுமார் 5MB வேகத்தில் கோப்புகளை பறிமாற்றும் திறன் கொண்ட இந்த UC Share செயலியில் ஒரு முழுப்படத்தினை வெறும் 22 வினாடிகளில் பறிமாற்றிவிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


தற்போது ஆண்ட்ராய்ட் கருவிகளுக்கு வெளியாகியுள்ள இந்த செயலியினை Google Play இணையப்பக்கத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.


தற்போது சந்தையில் பிரபலமாக இருக்கும் SHAREit செயலிக்கு போட்டியாக இந்த UC Share செயலி இருக்கும் என தெரிகிறது. கோப்பு பறிமாற்றத்தில் அதிவேகத்தினை கொண்டுவந்த SHAREit செயலியினை காட்டிலும் இந்த UC Share செயலி அதிவேகமாக செயல்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன!