ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் வெளியானது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி படத்தின் இரண்டாம் பாகம் 15 ஆண்டுகள் கழித்து எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்தார். இரண்டாம் பாகத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். சாமி 2 படத்தின் ட்ரெய்லரை மே 26-ம் தேதி வெளியிட முடிவு செய்தனர். 


ஆனால் தூத்துக்குடியில் அப்பாவி பொது மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதால் ட்ரெய்லர் ரிலீஸை தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தெரிவித்திருந்தார். இதையடுத்து, தூத்துக்குடி போராட்டம் தற்போது முடிவுக்கு வந்த நிலையில், 'சாமி2' படத்தின் ட்ரெய்லர் தேதியினை அறிவிக்க படக்குழுவினர் முடிவு செய்தனர். 


இந்நிலையில், தற்போது ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள 'சாமி 2' படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.