பெங்களூரு - கோவை வழிதடத்தில் பயணித்த SpiceJet விமானத்தில் புகைமூட்டம் நிலவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவையில் இருந்து பெங்களூரு பயணித்த SpiceJet விமானமானது, பெங்களூருவில் தரையிறங்கும் போது புகைமூட்டங்களை உருவாக்கியதாக தெரிகிறது. எனினும் விமானி விமானத்தினை சாதாரன முறையிலேயே தரையிறக்கியுள்ளார்.


தரையிறக்கத்திற்கு முன்னதாக பயணிகள் அமர்ந்திருக்கும் கேபினில் புகைமூட்டம் நிலவியது, பயணிகளிடையே சிறிது நேரம் பதட்டத்தினை ஏற்படுத்தியுள்ளது.



முன்னதாக கடந்த ஏப்ரல் 9-ஆம் நாள் ஹுப்ளி விமான நிலையத்தில் இயந்திர கோளாறு காரணமாக SpiceJet விமானம் திடீரென தரையிறங்கியது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று மீண்டும் விமானத்தில் ஏற்பட்ட இந்த கோளாறு பயணிகளிடையே அச்சத்தினை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.


திடீரென ஏற்பட்ட இந்த பிரச்சனைகள் குறித்து தகவல்கள் ஆராயப்பட்டு வருவதாக SpiceJet நிறுவனம் தெரிவித்துள்ளது.