தூத்துக்குடி போராட்டத்தில் காயமடைந்த மக்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.


இச்சம்பவத்தால் கடந்த மூன்று நாட்களாக அரசு பேருந்துகள் இயக்கபடாமல் இருந்தது. இதனையடுத்து கடந்த 25-ஆம் நாள் காவல்துறை பாதுகாப்புடன் பேருந்துக்கள் இயக்கப்பட்டன.


இந்நிலையில், தூத்துக்குடியில் ஸ்டர்லைட் போராட்டங்கள் ஓய்ந்து அமைதி நிலை திரும்புவதால் கடந்த 21-ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்வதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள சந்தீப் நந்தூரி அறிவித்தார்.


இதனையடத்து நேற்று காலை 8.00 மணிமுதல் 144 தடை உத்தரவு நீக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தூத்துகுடியில் சேதமடைந்த பகுதிகளை பார்வியிட அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி பயணம் மேற்கொண்டார். சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்ட அவர் போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். பின்னர் ஆட்சியருடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.


இவரையடுத்து தூத்துக்குடி போராட்டத்தில் காயமடைந்தவர்களை சந்தித்த பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்க்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நெஞ்சை உருக்கும் சம்பவமாக அமைந்துவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக மூட விரைவில் நாவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தள்ளார்!