கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பாஜகவிற்கு 8 எம்எல்ஏ.,க்களே பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் தங்கள் கட்சி எம்.எல்,ஏ.,க்கள் ஆலோசித்து வருகின்றன. 


இன்று நடக்கும் எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள எம்.எல்.ஏ.,க்கள் தங்குவதற்காக பெங்களூருவில் உள்ள ஈகிள்டன் ரிசார்ட்டில் 120 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. கர்நாடகாவில் புதிய அரசு ஆட்சி அமைக்கும் வரை எம்.எல்.ஏ.,க்களை இந்த ரிசார்ட்டிலேயே தங்க வைக்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.