ராகுல் காந்தியுடன் திருமணம் இல்லை: காங்கிரஸ் எம்எல்ஏ-வின் அதிர்ச்சி தகவல்!!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் திருமணம் நடைபெறப்போவதாக பரவிய வதந்தி வருத்தமளிப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி தெரிவித்துள்ளார்!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ராபரேலி தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் அதிதி சிங். இவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகிலேஷ் சிங்கின் மகள் ஆவார்.
இவர், காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் இருப்பது போலவும், அதிதி சிங்கின் பெற்றோருடன் சோனியா இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. அந்த புகைப்படங்களுடன், ராகுல் தனக்கான துணையை தேர்ந்தெடுத்து விட்டதாகவும், இதனால் சோனியா பெண் வீட்டாருடன் பேசி திருமணத்தை இறுதி செய்திருப்பதாகவும் தகவல் பரவியது.
இந்நிலையில், இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில்...!
சில வதந்திகள் என்னை பாதித்துள்ளது. ராகுல் காந்தி எனது சகோதரர் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். நான் அவர் கைகளில் ராக்கி கட்டி உள்ளேன். சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகள் என்னை மிகவும் வருத்தம் அடையச்செய்துள்ளன இவ்வாறு அவர் கூறியுள்ளார்.