பாக்கிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் நிலையிலேயே தற்போது காங்கிரஸ் சந்தித்து வருகிறது என பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்தித்து வரும் போன்ற நெருக்கடியினையே போன்றே தற்போது இந்தியாவில் காங்கிரஸ் கட்சி நெருக்கடியினை சந்தித்து வருகிறது என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று டெல்லி செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.


அப்போது அவர் தெரிவித்ததாவது... "முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் குடும்பத்தினர் 14 நாடுகளில் உள்ள 21 வங்கிகளில் சட்டவிரோதமாக பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித்துறை குற்றம் சாட்டியிருப்பதைச் சுட்டிக் காட்டினார்.



ப சிதம்பரத்தின் மீதான இக்குற்றச்சாட்டினை குறித்து விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தயாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 


முன்னதாக நேற்று முன்தினம் பாக்கிஸ்தான் நவாஸ் ஷெரீப் அவர்கள் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாக்கிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தின் மூலம் இந்தியாவின் நிலைப்பாடு உறுதிப்படுத்தப் பட்டிருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்!