RJD தலைவர் லாலுவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் சந்திப்பு!
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவினை கங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று AIIMS மருத்துவமனையில் வைத்து சந்தித்தார்!
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவினை கங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று AIIMS மருத்துவமனையில் வைத்து சந்தித்தார்!
இதய மற்றும் சிறுநீரக பிரச்சணைகள் காரணமாக, லாலு பிரசாத் யாதவ் அவர்கள் டெல்லி AIIMS மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் இருக்கும் அவரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று சந்தித்தார்.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலத்வரான லாலு பிரசாத் யாதவிற்கு, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் 14 வருட சிறைத் தண்டனையும், 60 லட்சம் அபராதமும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.
ஏற்கெனவே, மாட்டுத்தீவன ஊழல் வழக்குகள் மூன்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனைப் பெற்ற லாலு பிரசாத் யாதவ், இந்த ஊழலின் நான்காவது வழக்கான தும்கா கருவூல வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்த நான்கு வழக்குகளையும் சேர்த்து லாலு பிரசாத் யாதவுக்கு ஏறக்குறைய 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம், ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த லாலு பிரசாத் யாதாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரை இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துள்ளார்.