தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று துவங்க இருக்கும் நிலையில் பல்வேறு இடங்களில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயில் தாக்கத்தால் மக்கள் அஞ்சி வீட்டிற்க்குள் அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் மக்களை திருப்தி படுத்தும் வகையிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யவதர்க்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.


சென்னை, திருத்தணி, வேலூர், தருமபுரி, திருச்சி போன்ற பகுதிகளில் இன்று வெயில் 41 டிகிரியில் இருந்த நிலையில் சென்னையில் மட்டும் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


இதை தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு பகுதியில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் மே 2-ம் தேதிவரை இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.