ராஜ்யசபை அமளி `நாட்டின் பொறுமையை சோதிக்கிறீர்கள்`: வெங்கையா நாயுடு
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடர் அமளியால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடங்கிய நாள் முதல் காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து போன்ற விவகாரங்களை முன்வைத்து தமிழக மற்றும் ஆந்திரா உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரண்டு அவைகளும் தொடர்ந்து முடங்கி உள்ளன. இதனால் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி விவாதிக்க முடியவில்லை.
இன்றும் பாராளுமன்றம் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. மற்றும் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை 12 மணிக்கு கூடியதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. மற்றும் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இன்று நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல மாநிலங்களவையும் அமளி காரணமாக பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் தொடர்ச்சியாக எதிர்கட்சி, அதிமுக மற்றும் ஆந்திரா உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால், வெங்கய நாயுடு அதைக்குறித்து, நாட்டின் பொறுமை சோதிக்கப்படுவதாகவும், நாங்கள் எந்த பில்கள் பறிமுதல் செய்யவில்லை, நாடு வளர்ச்சியை விரும்புகிறது. நாட்டு மக்களின் பொறுமையை சோதித்துப் பார்க்காதீர்கள். தயவுசெய்து இந்த மன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள உதவுங்கள் எனக் கூறினார். பின்னர் மாநிலங்களவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.