GIF படங்களை பயன்படுத்தும் அலாதி பிரியரா நீங்கள்? அப்போ உங்களுக்காகவே Google புதிய செயலி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Google நிறுவனமானது Gboard என்னும் மூன்றாம் பயனர் செயலியின் கூட்டில் GIF புகைப்படங்களை உறுவாக்க வழிவகை செய்கிறது. பயனர்கள் தங்களுக்கு ஏற்ற வகையினில் GIF புகைப்படங்களை உறுவாக்கும் இச்செயலியினை முன்னதாக iOS சாதனங்களில் கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்தது.


இந்நிலையில் தற்போது இந்த செயலியினை ஆண்ட்ராய்ட் செயலிகளுக்கும் அறிமுகம் செய்துள்ளது. 


Gboard ஆனது பயனர்களிடம் இருந்து மாறுபட்ட, பலதரப்பட்ட பாவங்களை பெற்று அதனை GIF படமாக மாற்ற உதவுகிறது.



தப்போது ஆண்ட்ராய்ட் கைபேசிகளுக்கு இந்த செயலியின் Beta பதிப்பினை வெளியிட்டுள்ள Gboard, விரைவில் நடைமுறை பதிப்பினை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Beta பதிப்பினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் பயனர்கள் தங்களது செயலியின் முகப்பு பக்கத்தில் இருக்கும் 'Make a GIF' என்னும் வசதியினை கொண்டு தங்களது பாவங்களை பதிவேற்றி, தங்களுக்கு விருப்பமான GIF படங்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக சேர்க்கப்பட்ட (Pre Defined) படங்களையும் உங்கள் படத்துடன் சேர்த்து புதிய GIF படங்களை உருவாக்கலாம் எனவும் தெரிகிறது.