இஸ்ரேல் மக்களுக்கு நாட்டின் மீது உரிமை உண்டு: சௌதி இளவரசர்
இஸ்ரேல் மக்களுக்கு இஸ்ரேல் நாட்டின் மீது முழு உரிமை உள்ளதாக சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மக்களுக்கு இஸ்ரேல் நாட்டின் மீது முழு உரிமை உள்ளதாக சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
சௌதி நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான். இவர் பொறுப்பேற்ற பின் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமம், ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கு ஊதியம், பெண்கள் விளையாட்டுப் போட்டிக என பல்வேறு நடவடிக்கைகள் சௌதி நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த அவர், இஸ்ரேலிய மக்களுக்கு அவர்களுடைய நாட்டில் அமையுடன் வாழ முழு உரிமை உள்ளது. பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேலியர்களுக்கும் நாட்டில் முழு உரிமை உள்ளது. அமைதியை நிலைநாட்டும் வகையில் இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.