மேஷம்:
இன்று தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். அதிலும் கலைத்துறையில் டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். நல்ல நட்பு வட்டாரம் கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6


ரிஷபம்:
இன்று இலக்கியம், கதை, கவிதைத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான நாளிது. கலைத்துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும்.


அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6


மிதுனம்:
இன்று புதிய பொறுப்புகள் வந்து சேரும். கிடப்பில் போட்டிருந்த வேலைகளை செய்வீர்கள். ஊதிய விஷயங்களில் நல்ல மனநிலை இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டும் காலமிது. பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5


கடகம்:
இன்று பிதுரார்ஜித சொத்து விஷயங்களில் ஒரு நல்ல முடிவுகள் வந்து சேரும். குடும்பச் செலவினங்கள் தாராளமாகும். பிள்ளைகள் வழியில் கடன்பெற வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் இடமாறுதல்கள் ஏற்படலாம்.


அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6


சிம்மம்:
இன்று தம்பதிகளுக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். வழக்கு வியாஜ்ஜியங்களில் நிலுவைகள் தொய்வு ஏற்படலாம். ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும்.


அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9


கன்னி:
இன்று தடைபட்டிருந்த சுபகாரியங்கள் அனைத்தும் நடப்பதற்குண்டான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வீடு கட்டும் முயற்சியில் உள்ளவர்களுக்கு துரித கதியில் பணிகள் நடைபெறும். உறவுகள், நண்பர்கள் மத்தியில் இருந்த கருத்து வேற்றுமை அகலும்.


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5


துலாம்:
இன்று சுமூகமான அணுகுமுறைகளை வகுத்துக் கொள்வீர்கள். பத்தில் உலவும் புதன் வழக்கில் வெற்றி அடைவதற்குண்டான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். நெடுங்காலமாக மனதில் தேங்கிக் கிடந்த திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.


அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7


விருச்சிகம்:
இன்று சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். புதிய நட்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். நல்ல பல குணாம்சங்கள் வந்து சேரும்.


அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9


தனுசு:
இன்று புதிய கடனுக்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் நன்மை பயக்கும். தொழிற்சாலைகளில் பணி செய்வோருக்கு கடுமையான உழைக்க வேண்டிய நாளிது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும் நாளிது. எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும்.


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9


மகரம்:
இன்று புதிய பணியில் சேர்ந்தவர்களுக்கு அமைதியான முறையில் மனச்சஞ்சலங்கள் விலகும். வெளிநாட்டு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு அழைப்புகள் வந்து சேரும் காலமிது. எதிர்பாராத செலவுகள் நேரிடலாம். புதிய வியாபார ஒப்பந்தங்கள் நடந்தேறும்.


அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9


கும்பம்:
இன்று உறவுகள் வழியில் மனச் சிக்கல்கள் ஏற்படலாம். சொத்து விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். உங்கள் மேல் போட்டி மற்றும் பொறாமை கொண்டவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு காத்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு தேடி வரும். மேன்மைகளை அடைவீர்கள்.


அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9


மீனம்:
இன்று வீட்டில் நடைபெற வேண்டிய சுபகாரியங்கள் சுமூகமாக நடைபெறும். தடைபட்டிருந்த திருமண ஏற்பாடுகள் இனிதே நிறைவேறும். பிள்ளைகள் வழியில் சின்னச் சின்ன செலவுகள் நேரிடலாம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை தேவை.


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9