ராசிபலன்; இன்று பண விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை!
இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்.....
இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்.....
மேஷம்:
இன்று பண விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. தங்களது அலுவலக கணக்கு வழக்குகளை மிகச்சரியாக கையாளுதல் நல்லது. தொழிலில் நல்ல லாபம் பார்க்கலாம். பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனைகள் பெறுவது அவசியமாகிறது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9, 3
ரிஷபம்:
இன்று உத்தியோகம் பார்ப்பவர்கள் பிந்தங்கிய நிலை மாறி முன்னேற்றம் காண்பர். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமை மேம்படும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு பணியிடமாற்றம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 4, 6
மிதுனம்:
இன்று எதிலும் லாபம் கிடைக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும்
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 4, 6
கடகம்:
இன்று திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். உடல்நலனைப் பொறுத்த வரை சிறப்பாக இருக்கும். சளி மற்றும் மார்புத்தொல்லை வரலாம். கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6
சிம்மம்:
இன்று விருதுகளை வாங்குவதற்கு சிறிது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிவரும். வியாபாரிகள் மனைவி பெயரில் புதிய தொழில் தொடங்கலாம். விற்பனையாளர்கள் நல்ல லாபம் கிடைக்கப் பெறலாம். நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 7
கன்னி:
இன்று புதிய தொழில் தொடங்குவதற்கு சரியான ஆலோசனை செய்யவும். வாழ்க்கைத்துணையின் பெயரையும் சேர்த்தே புதிய தொழில் தொடங்க வேண்டும் வாகனம் சேர்க்கை சேரும். செய்யும் தொழிலில் அலைச்சல் அதிகமாக இருக்கும். எந்த தொழிலானாலும் நீங்களே நேரிடையாக செயல்படுவது நல்லது. புதிய காண்டிராக்ட் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 6
துலாம்:
இன்று விருதுகளை வாங்குவதற்கு சிறிது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிவரும். வியாபாரிகள் மனைவி பெயரில் புதிய தொழில் தொடங்கலாம். நல்ல லாபம் கிடைக்கப் பெறலாம். வெளி இடத்திலிருந்து வரும் செய்திகள் காதுக்கு இனிமையானதாக இருக்கும். பிள்ளைகள் வழியில் முன்னேற்றம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
விருச்சிகம்:
இன்று குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பழைய வீட்டை புதுப்பிப்பதற்கான நிதிவசதி கிடைக்கும். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். பெண்களுக்கு மனக்குழப்பம் தீரும். கலைத்துறையினருக்கு நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
தனுசு:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும். எதிர்பார்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். மேலதிகாரிகளின் அனுசரனை இருந்துவரும். வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றைப் பெறலாம். லாபம் அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். எதிரிகளை உதிரிகளாக்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
மகரம்:
இன்று பொருட்கள் திருட்டு போகலாம். ஜாக்கிரதை. ஞாபக சக்தியை இழக்காமல் இருபதற்கு மனதை சஞ்சலத்தில் ஆழ்த்த கூடாது. பயிற்சியினால் அது சாத்தியமாகும். கலைத்துறையினருக்கு ஓரளவு நன்மைகள் வந்து சேரும். ஓரளவு சோதனைகளும் இருக்கும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியம். நம்பிக்கையுடன் செய்யும் இந்த வழிபாட்டால் நேர்மறையான செயல்கள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
கும்பம்:
இன்று எதிர்பார்த்திருந்த தனலாபம், தேக ஆரோக்கியத்தில் நன்மை, தாயார் தாய் வழி உறவினர்களுடன் இருந்த சுமூக நிலைமை என அனைத்து நல்ல பலன்களும் அப்படியே தொடரும். எந்த இடத்திற்கு சென்றாலும் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்ததல்லவா இனி அந்த நிலைமை மாறும். சொன்னால் சொன்ன நேரத்தில் உங்களால் இனி செல்ல முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
மீனம்:
இன்று தந்தையுடன் உறவு சிறக்கும். வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு பொன்னான நேரமிது. உங்கள் வியாபாராத்தை பெருக்கும் காலமிது. மிகவும் லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். தூங்கப் போகும் முன் எந்த விதமான யோசனைகளும் வேண்டாம். ஏதேனும் பயணம் செய்ய நேர்ந்தால் சரியாக திட்டமிடவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 1