மேஷ ராசி நண்பர்களே... உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்?
கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பம் ஏற்படும். நகைச்சுவைக்காக சொல்லக்கூடிய சில கருத்துகள்கூட சீரியசாகக் கூடும்.
மேஷம்: கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பம் ஏற்படும். நகைச்சுவைக்காக சொல்லக்கூடிய சில கருத்துகள்கூட சீரியசாகக் கூடும்.
ரிஷபம்: விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் அவ்வப்போது வந்து நீங்கும். நீண்டகால பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது.
மிதுனம்: வெளியூரிலிருந்து எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேலைச்சுமை குறையும். பண வரவு உண்டு.
கடகம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லைகள் நீங்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும்.
சிம்மம்: பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். பணவரவு உயரும்.
கன்னி: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். யாரையும் மனம் நோகும்படி எடுத்தெறிந்து பேசாதீர்கள். எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். திடீர் பயணம் உண்டு.
துலாம்: சாதுர்யமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். நவீன ரக ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வைப் பாராட்டுவீர்கள்.
விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.
தனுசு: மனைவிவழி உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும்.
மகரம்: சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. வாகனத்தைச் சீர்செய்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.
கும்பம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் பண உதவி கிடைக்கும். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத்தொல்லை விலகும். கலைப்பொருட்கள் சேரும்.
மீனம்: எதிர்பார்ப்புகள் எளிதில் பூர்த்தியாகும். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அரசு காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.