மங்கள செவ்வாய் நாளான இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!
இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என தெரிந்துக்கொள்ள... இன்றைய ராசிபலன்!
இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என தெரிந்துக்கொள்ள... இன்றைய ராசிபலன்!
செவ்வாய் - 21.08.2018
மேஷம்:
இன்று தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தால் மனஉளைச்சல்கள் ஏற்படாமல் இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 4
ரிஷபம்:
இன்று குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகி ஒற்றுமைக் குறைவுகளை ஏற்படுத்தும். சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். பொருளாதாரநிலை ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகளையும் எதிர்கொள்ள நேரிடும்
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4
மிதுனம்:
இன்று உற்றார்- உறவினர்களின் வருகையால் சில மனசஞ்சலங்கள் உண்டாகும். முயற்சிகள் அனைத்திலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3
கடகம்:
இன்று கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் எதிர்பார்க்கும் லாபத்தை அடையமுடியாது. கொடுக்கல்-வாங்கலிலும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல்போகும். கடன் தொகைகளை வசூலிப்பதில் தடைகள் உண்டாகும். வம்பு வழக்குகள் சாதகமாக இருக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6
சிம்மம்:
இன்று தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கையிலிருக்கும் ஆர்டர்களைக்கூட முடித்துக்கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்படும். அரசுவழிகளில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும்.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 6
கன்னி:
இன்று கூட்டாளிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல், டென்ஷனைக் குறைத்துக்கொள்ள முடியும்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் உழைப்பிற்கான முழுப்பலனை அடையமுடியும். அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.
அதிர்ஷ்டநிறம்: பிரவுன், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6
துலாம்:
இன்று எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கப்பெற்றாலும் சில நேரங்களில் அதிகநேரம் உழைக்க வேண்டியிருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்துவதுடன் குடும்பத்தைவிட்டும் பிரியநேரிடும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.
அதிர்ஷ்டநிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 4
விருச்சிகம்:
இன்று புதிய வேலை வாய்ப்புகள் தகுதிக்கேற்றபடி அமையும். பெண்கள் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை நீடிக்கும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்டநிறம்: பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
தனுசு:
இன்று அசையா சொத்துகளாலும், வண்டி, வாகனங்களாலும் வீண்செலவுகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புத்திரவழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, கருநீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 4, 6
மகரம்:
இன்று தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம். அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அவர்களின் தேவை அறிந்து செயல்படுவது உத்தமம். உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். எந்தவொரு காரியத்திலும் வெற்றி கிட்டும்.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
கும்பம்:
இன்று சிறப்பாக இருக்கும். நவீனமுறைகளைக் கையாண்டு தொழிலைப் பெருக்கமுடியும் என்றாலும் வேலைக்குத் தக்கசமயத்திற்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். இதனால் தொழிலில் சுணக்கம் ஏற்படும். அரசுவழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். நீர்வரத்து சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்டநிறம்: கருஞ்சிவப்பு, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3
மீனம்:
இன்று கெடுபிடிகள் அதிகரிப்பதால் கிடுக்குப் பிடியான சூழ்நிலைகள் உண்டாகும். கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடையின்றிக் கிட்டும். வரவேண்டிய பணத்தொகைகளும் எதிர்பார்த்தபடி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும்.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
வழங்கியவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர், தொடர்புகொள்ள http://www.kuppuastro.com/ (அ) http://kuppuastro.blogspot.in/ என்ற இணைப்பினை பின்தொடரவும்