திருவண்ணாமலையில் இன்று அதிகாலை கார்த்திகைத் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிசம்பர் 2-ம் தேதி கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு திருவண்ண மலை மீது தீபமும்  ஏற்றப்பட உள்ளது. இத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. 


இத்திருநாளுக்கு 35௦௦ சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பாதுகாப்புப் பணியில் 55௦௦ காவல்த்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.