Ayodhya New Mosque: கண்கவர் தோற்றத்துடன் அயோத்தி மாநகரில் புதிய மசூதி கட்டும் ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன. அயோத்தியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் மசூதி ஒன்றும், மருத்துவமனை ஒன்றும் கட்டப்படும். அனைவரையும் வியக்க வைக்கும் தோற்றத்தில் உருவாகவிருக்கும் இந்த கட்டமைப்புகளின் வடிவமைப்பை இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை (Islamic Cultural Foundation) வெளியிட்டது.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அயோத்தியா என்றாலே பாபர் மசூதியும் (Babri Masjid) ராமர் ஆலயமும் (Ram Mandir) தான் உடனடியாக நினைவுக்கு வரும். தற்போது ராமர் ஆலய கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டன.அதே நேரத்தில் மசூதியின் கட்டுமானத்திற்கான பூர்வாங்கப் பணிகளும் தொடங்கிவிட்டன.


மசூதியின் வடிவமைப்பை இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை (Indo-Islamic Cultural Foundation (IICF)) அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த வடிவமைப்பை வீடியோ மாநாடு மூலம் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் (Jamia Millia Islamia University) கட்டடக்கலை பேராசிரியர் எஸ்.எம்.அக்தர் வெளியிட்டார். 


Also Read | பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்; மசூதி கட்டுமானம் முதல் ராமர் கோயில் கட்டுமானம் வரை


ராமஜென்மபூமி-பாப்ரி மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் ஒதுக்கப்பட்ட ஐந்து ஏக்கர் நிலம் அயோத்தியின் தன்னிபூர் கிராமத்தில் உள்ளது. இந்த புதிய மசூதியில் ஒரே நேரத்தில் 2,000 பேர் தொழுகை நடத்தமுடியும்.  


மசூதி வளாகத்தில் நூலகம் ஒன்று, அருங்காட்சியகம் மற்றும் சமூக சமையலறை (Community kitchen) ஆகியவை கட்டப்படும். இந்த வடிவமைப்பு (Design) இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. 


குடியரசு தினமான ஜனவரி 26ஆம் (Republic Day) தேதியன்று மசூதியின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிகிறது. தன்னிப்பூர் (Dhannipur) கிராமத்தில் கட்டப்படவுள்ள இந்த அதிநவீன மசூதிக்கு பாபர் அல்லது வேறு ஏதாவது ஒரு மன்னரின் பெயர் வைக்கபடலாம் என்று கட்டடக்கலை பேராசிரியர் எஸ்.எம்.அக்தர் கூறினார்.


மசூதியை நிர்மாணிப்பதற்கான பணியை மேற்கொள்வதற்காக இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையை (Indo islamic cultural foundation)  சுன்னி வக்ஃப் வாரியம் (Sunni Waqf Board) ஆறு மாதங்களுக்கு முன்பு நிறுவியது. 


Also Read | நாத்திகம், மதம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றை மனித மனம் தேடுவதற்கான காரணம் என்ன?


புதிய மசூதி பாபர் மசூதியை விட பெரியது, ஆனால் முன்பு இருந்தது போன்ற விதானங்கள் இருக்காது. மசூதி கட்டுமானத்திற்கான செலவு எவ்வளவு என்பதை சொல்வது கடினம் என்று பேராசியர் எஸ்.எம்.அக்தர் கூறுகிறார். மசூதி வளாகத்தில் சூரிய மின் உற்பத்தி நிலையம் ஒன்றும் கட்டப்படும்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR