இந்திய நேரப்படி அதிகாலை 1.31 மணியளவில் இந்தியாவில் சந்திரகிரகணம் காட்சியளித்தது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பூமியும் சந்திரனும் நேர்க்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் படிவதால் சந்திரகிரகணம் ஏற்படுவதாக அறிவியல் குறிப்பிடுகிறது. இந்தாண்டின் முதல் சந்திரகிரகணம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தெளிவாகத் தெரிந்தது. அதிகாலை 1.32 முதல் 4.30 வரை கிரகணத்தை பலரும் பார்த்து மகிழ்ந்தனர்.


உலகின் பல்வேறு பகுதிகளில் பகுதி நேர சந்திர கிரகணம் காட்சியளித்தது. இதனை பலர் கேமராக்களில் ஆர்வத்துடன் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சில இடங்களில் வெள்ளையாகவும் மஞ்சளாகவும் காட்சியளித்த சந்திரன் சிவப்பு ரத்த நிறத்திலும் காட்சியளித்தாக கூறப்படுகிறது.



இந்தியாவில் மும்பை, கான்புர், புவனேசுவர் உள்ளிட்ட வடமாநில நகரங்களில் பகுதி நேர சந்திரகிரகணம் காட்சியளித்தது. இதனால் வானில் ஒளி குறைந்து நிலவு சாம்பல் நிறத்தில் மாறியது.


சென்னையில் நெடு நாட்டகளுக்கு பின்னர் மழை பெய்ததால் வானம் மேகமூட்டத்துடனும் இருந்தது, அதனால் சந்திரகிரகணம் கண்ணுக்குத் நேரடியாக தெரியவில்லை. ஆயினும் பிர்லா கோளரங்கத்தில் சந்திரகிரகணத்தைப் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


முன்னதாக சந்திர கிரகணத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பல முக்கிய இந்து கோயில்களில் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 


சந்திர கிரகண தினமான இன்று விடியற்காலை 1.32 மணிக்குப் பௌர்ணமி திதி, உத்திராட நட்சத்திரம், மகர ராசி, மேஷ லக்னத்தில் தொடங்குகியது. கிரகண காலம் என்பது நம் சாஸ்திரங்களில் புண்ணிய காலமாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. கிரகண காலத்தில் நாம் செய்யும் நல்ல காரியம், ஒன்றுக்குப் பல மடங்கு பலன்களைத் தரவல்லது.