பல நூற்றாண்டு பழமையான கேரளாவின்  ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலின் நிர்வாகத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்கு உரிமை உண்டு என, உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பு வழங்கியது அனைவருக்கு நினைவில் இருக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோயில், 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தினரால், மீண்டும் கட்டப்பட்டது. 1947 ஆம் ஆண்டில் இந்திய ஒன்றியத்துடன் ஒருங்கிணைப்பதற்கு முன்னர் திருவிதாங்கூர் அரச குடும்பம்,தெற்கு கேரளாவின் (Kerala) சில பகுதிகளையும் தமிழ்நாட்டின் சில பகுதிகளையும் ஆட்சி செய்தது வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


சேரமான் பெருமான் முதன் முதலில் பதம்நாப சுவாமி கோயிலை எழுப்பினார். 900 வருடங்களுக்கு முன்பு திருவிதாங்கூர் கோயிலை மன்னர் மார்த்தாண்ட வர்மா புதுப்பித்தார். இந்த கோவில் 1686-ல் தீக்கிரையானது. பின்னர், 1729-ல் பத்மநாபசுவாமியின் மீது தீவிர பக்தி கொண்டிருந்த திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா கோவிலை புதுப்பித்தார். 


ALSO READ | தீர்ப்பில் பெற்ற வெற்றி பத்மநாபசுவாமியின் அருளாசி: திருவிதாங்கூர் மன்னர் குடும்பம்


1750-ல் தனது அரசு, தனது ஆளுகைக்குட்பட்ட பகுதி, தன்னிடம் உள்ள செல்வம் என அனைத்தையும் ஆலயத்தின் மூலவரான பத்மநாபசுவாமிக்கே சொந்தம் என பட்டயம் எழுதிக்கொடுத்து, சுவாமியிடம் சரணாகதி அடைந்தார் மார்த்தாண்ட வர்மா. பத்மநாபசுவாமியின் மீது கொண்ட அளவற்ற பக்தியின் காரணமாக திருவிதாங்கூர் மன்னர்கள் பத்மநாபதாசர் என்றே அழைக்கப்பட்டனர்.


திருவிதாங்கூரின் கடைசி ஆண்ட மகாராஜா ஸ்ரீ சித்திரா திருநாள் பலராம வர்மா 1991 ல் இறந்தார். அரியணைக்கு வாரிசுகள் யாரும் இல்லை என்பதால் அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது தம்பி ஸ்ரீ உத்ராடம்  திருநாள் மார்த்தாண்ட வர்மா கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டார். அவர் 2013 இல் காலமானார், அவருக்குப் பின் மகாராணி கார்த்திகை திருநாள் லட்சுமி பாயின் மகன் ஸ்ரீ மூலம் திருநாள் ராம வர்மா பொறுப்பை ஏற்றார்.


இந்த பத்பநாப சுவாமி கோவிலில் உள்ள கோயிலின் நான்கு பாதாள அறைகளில் தங்க ஆபரணங்கள், நகைகள் மற்றும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள விலைமதிப்பற்ற கற்கள் உள்ளன என்ற  தகவல் 2011 ஆம் ஆண்டு வெளிவந்ததை அடுத்து, அது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.


இதில் கோயிலில் உள்ள பி என்னும் பாதாள அறையை மட்டும் திறக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. அந்த அறையில் மிகப்பெரிய சக்தி குடி இருக்கிறது என்றும், திறந்தால் மன்னர் குடும்பத்துக்கு ஆபத்து என்பதோடு, பேரழிவு ஏற்படும் என, மன்னர் குடும்பத்தினரும், பக்தர்களும் நம்புகின்றனர். இவர்களிடம் வந்த எதிர்ப்பை அடுத்து  அந்த அறை திறக்கப்படவில்லை. 


ALSO READ | ஸ்ரீபத்மநாபசாமி கோயிலின் நிர்வாகத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்கு உரிமை உண்டு: SC


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR