புதுடெல்லி: இன்று ஆவணி அவிட்டம் என்னும் இந்த மத சடங்கு பல தரப்பு இந்துக்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் இந்து மதத்தை சேர்ந்தவர்களில், முப்புரிநூல் என்றும் அழைக்கப்படும் பூணூல் மாற்றுவார்கள்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆடி மாதம் தானே இன்று? ஆவணி அவிட்டம் என்று ஏன் அழைக்கப்படுகிறது தெரியுமா? 
ஆவணி அவிட்டம் என்னும் ஆண்டுச் சடங்கானது, உபநயனம் செய்து கொண்டவர்கள் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தினோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கும் சடங்காகும்.


இந்து மதத்தில் ரிக்,யசுர் வேதங்களை பின்பற்றுபவர்கள் அனுசரிக்கும் சம்பிரதாயம் இது. சாம வேதத்தை கடைபிடிப்பவர்கள் பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் கொண்டாடுவர். இது ஓர் கூட்டுவழிபாடு ஆகும். இந்நாளில் அனைவரும் ஆற்றங்கரையிலோ குளக்கரையிலோ குளித்து இத்தகைய சடங்கினை உருவாக்கிய முன்னோர்களுக்கு நன்றி கூறி தர்ப்பணம் செய்வார்கள். தாங்கள் அணிந்துள்ள பூணூலைப் புதுப்பிப்பதோடு தாங்கள் கற்ற வேதங்களை பாராயணம் செய்வார்கள்.  


Read Also | Raksha Bandhan:சகோதர சகோதரிகளை பாசக் கயிற்றால் பிணைக்கும் ரக்‌ஷா பந்தனின் சிறப்பு...


சமஸ்கிருத மொழியில் உபாகர்மா என்பதன் பொருள் தொடக்கம் எனபதாகும். இன்றைய தினம் கல்வி கற்கத் தொடங்குவதற்கு சிறந்த நாளாகும்.  காயத்ரி மந்திரத்தை இன்று பாராயணம் செய்வார்கள்.   


இன்று சகோதர சகோதரிகள் தங்கள் உறவை உறுதிப்படுத்திக் கொள்ளும் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. மணிக்கட்டியில் கயிற்றைக் கட்டி பாசப் பிணைப்பை உறுதியாக்கும் பண்டிகை ரக்‌ஷா பந்தன் என்றால், ஆவணி அவிட்டம் என்னும் இந்த சம்பிரதாயம், இந்து மதத்தை சேர்ந்த சில பிரிவு ஆண்கள், தங்கள் முப்புரி நூலை மாற்றும் நாளாக அனுசரிக்கப்படுகிறது.


நூலே மனிதர்களை என்றென்றும் பின்னி பிணைக்கும் கண்ணியாக அந்நாள் முதல் இந்நாள் வரை எந்நாளும் தொடர்கிறது. ரக்‌ஷா பந்தனில் மனித உறவு என்னும் கண்ணி பலப்படுத்தப்படுகிறது. கல்வி என்னும் கடலை, நூல் என்னும் கருவியால் மனிதனுடன் பிணைக்கப்படும் நாள் ஆவணி அவிட்டம்....