காரடையான் நோன்பு என்பது திருமணமான பெண்களால் அனுசரிக்கப்படும் முக்கியமான நிகழ்வாகும். இறைவன் தங்களின் கணவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் என்று வேண்டி பெண்கள் இந்த நோன்பை மேற்கொள்வர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த காரடையான் நோன்பு (Karadaiyan Nombu) பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. காமாட்சி நோன்பு, கௌரி நோன்பு, சாவித்ரி நோன்பு என அழைக்கப்படுகிறது. இது பெண்கள் மேற்கொள்ளும் நோன்புகளிலேயே மிகவும் முக்கியமான நோன்பாகும்.


ALSO READ | மாசி மாத ஏகாதசியின் மகத்துவம் என்ன: விரதம் இருந்து வரங்களைப் பெறுவது எப்படி?


காரடையான் நோன்பின் நேரம்
2021 ஆம் ஆண்டு காரடையான் நோன்பு இன்று ஆகும். அதன்படி இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 3.45 மணி முதல் 4.14 மணிக்குள் திருமணமான (Married Women) பெண்கள் தங்கள் விரதத்தை முடித்து சரடு என்று சொல்லப்படும் மஞ்சள் கயிற்றை அணிந்து கொள்ளலாம். 


காரடையான் நோன்பு வழிமுறை
> நைவேத்தியம்- காரரிசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை.
> விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜை செய்யும் இடத்தை மெழுகிக் கொள்ள வேண்டும். 
> தரையில் சிறிய கோலமிட வேண்டும்.
> கோலம் மேலே நுனி வாழை இலை போட்டு, இரண்டு அடையும், உருக்காத வெண்ணையும் வைக்க வேண்டும்.
> வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப்பழம் வைக்க வேண்டும். அதன் மீதே நோன்புக் கயிற்றையும், புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும்.
> இலையைச் சுற்றி நீர் தெளித்து நிவேதனம் செய்ய வேண்டும். பின்னர் நோன்பு கயிற்றை பெண்கள் கழுத்தில் கட்டிக்கொள்ள வேண்டும்.


ALSO READ | பத்மநாபா ஏகாதசி விரதம்; தேவசயனி ஏகாதசி விரத மகிமைகள்... கடைப்பிடிக்கும் வழிமுறைகள்!


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR