வட இந்தியாவில் மவுனி அமாவாசை என அழைப்படும் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு உ.பி.,யின் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவில் இன்று கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த 15ம் தேதி கும்பமேளா திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் குவிந்து வருகின்றனர். இதனிடையே, தை அமாவாசையான இன்றைய தினத்தை வடமாநிலத்தவர்கள் மவுனி அமாவாசை என்ற பெயரில் அனுஷ்டிக்கின்றனர். 


 இந்நிலையில் இந்நாளில் கடற்கரையிலோ, நதிக்கரையிலோ புனித நீராடி முன்னோர்களை வழிபடுவது வழக்கம். அந்த வகையில், கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்கமத்தில் அதிகாலை முதலே லட்சக்கணக்கானோர் புனித நீராடி, முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர். இதேபோன்று, மவுனி அமாவாசையை முன்னிட்டு, கங்கையின் வழித்தடமான வாரணாசியில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர்.