காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும் 370-வது பிரிவு அகற்றப்பட்ட பின்னர் இந்தியாவுடனான மோசமான உறவுகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தீபாவளியை முன்னிட்டு, இந்து மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம், சமீபத்தில் அவர் தீபாவளிக்கு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இந்துக்களை வாழ்த்தினார், ஆனால் அவர் இந்த வாழ்த்துக்களை பாகிஸ்தானில் வாழும் இந்து குடிமக்களுக்கு மட்டுமே வழங்கியுள்ளார்.
 
ஆம், சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்விட்டரில் "எங்கள் இந்து குடிமக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்ட் 5-ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370-வது பிரிவை மோடி அரசு திரும்ப பெற்றது நாம் அனைவரும் அறிந்தது. இதன் மூலம் அவர் வரலாற்று புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை அகற்றி எறிந்தார். 370-வது பிரிவை நீக்கியது மட்டும் அல்லாமல், ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து (லடாக் எனும் சட்டமன்றம் இல்லா யூனியன் பிரதேசம், ஐம்மு காஷ்மீர் என்னும் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசம்) உத்தரவு பிறப்பித்தார். 



மோடி அரசாங்கத்தின் இந்த முடிவிற்குப் பின்னர், பாகிஸ்தான் கோபத்தின் உச்ச நிலைக்கு சென்றது. இந்தியாவுடனான அதன் உறவுகள் தற்போது வரையிலும் மோசமாக உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த விவகாரத்தில் தலையிட உலகெங்கிலும் உள்ள நாடுகளின் தலையீட்டைக் கோரியுள்ளார், ஆனால் இது இந்தியாவின் உள் விஷயமாக இருப்பதால், யாரும் இம்ரான் கான் வார்த்தைகளுக்கு செவி சாய்க்கவில்லை.


இந்நிலையில் தற்போது உலகெங்கிலும் இந்து மக்கள் தீபாவளி கொண்டாடி வரும் நிலையில், பாகிஸ்தான் வாழ் இந்துக்களுக்கு தனது தீபாவளி தின வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்டுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.