ஈகைத் திருநாள் இசுலாமியர்களின் இருபெரும் திருநாட்களில் ஒன்று. இஸ்லாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து ஈகைத் திருநாள் இன்று  கொண்டாடுகின்றனர். ஈத் என்பது அரபுச் சொல்லாகும். இதன் பொருள் கொண்டாட்டம் அல்லது திருநாள்/பெருநாள் ஆகும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி நபிகள் நாயகம் முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 


ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பது இஸ்லாமிய மதத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 


Also Read | ரம்ஜான் நோன்பில் நாள் முழுதும் உற்சாகமாக இருக்க Food Tips


மாதம் முழுவதும் நோன்பு அனுசரிப்பது, சுய கட்டுப்பாடு, ஈகை, உண்ணா நோன்பு என ஒருவரின் ஆன்மீக உள் தேடலுக்கான பண்டிகை ரம்ஜான்.


நோய்வாய்ப்பட்டவர்கள், பயணத்தில் உள்ளோர், வயது முதிர்ந்தோர், கர்ப்பிணிப் பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள், நீரிழிவு நோயாளிகள், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாதவிடாய் காலத்தில் உள்ளோர் என சிலருக்கு மட்டுமே ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.


ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும்போது, தன்னடக்கம், நாவடக்கம், உணவுக்கட்டுப்பாடு, சமூக நலம் பேணுதல் போன்ற நற்குணங்கள் வளர்கின்றான. 


Also Read | 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி!


ரமலான் நோன்பின் பலன்கள் குறித்து திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயம் 183 ஆம் வசனத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. "இறை நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமை ஆக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்" 


இந்த வாக்கை கடைபிடித்து இன்றும் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று ஈகைத் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.


அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!


Also Read | மனைவி, ஆசைநாயகி இருவருக்கும் மரண காப்பீட்டுத் தொகை பிரித்து கொடுக்கப்பட்ட விநோதம்


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR