ராமநவமி- 2018! வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி வாழ்த்து!
ராம நவமி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராம நவமி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராமபிரான் அவதரித்த நாளே ‘ராமநவமி’ கொண்டாடப்படுகிறது. மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம். ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர்.
இந்நிலையில் “ராம நவமி தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். இந்த வாழ்த்து செய்தியுடன் ஒரு வீடியோ பதிவையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.