கார்த்திகை பூஜை முன்னிட்டு இன்று மாலை 5 மணியளவில் சபரிமலை நடை திறக்கப்படுகிறது என தேவஸ்தானம் போர்ட் அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாந்திரி கந்தரவு ராஜ்வீரு, மூத்த பூசாரி VN வாசுதேவன் நம்பூதிரி முன்னிலையில் இன்று நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நாளை காலை 5 மணியளவில் நடை வழக்கம்போல் திறக்கப்படும். வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிசேகம் தொடர்ந்து நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜூலை 17 துவங்கி ஜூலை 21 வரையில் உதயாஷ்டம பூஜா, புஷ்பாபிசேகம், காலபிசேகம் மற்றும் படிப்பூஜை நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜூலை 21-ஆம் நாள் நடை இரவு 10 மணியளவில் அடைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில் சபரிமலை பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சபரிமலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் உலக பிரசித்திபெற்ற ஆன்மீக தலமாக திகழ்கிறது. இங்கு நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையின்போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் இங்கு குவிவது வழக்கம், மேலும் வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் சபரிமலை சென்று சாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் தேவஸ்தானம் போர்டு ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறது.


இந்நிலையில் தற்போது ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக நெடுவஞ்சேரி விமான நிலையம் அருகே உள்ள காலடி என்ற இடத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு வருகிறது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.